டிசம்பரில் ஜிஎஸ்டி வரி வசூல் எவ்வளவு தெரியுமா?

  Newstm Desk   | Last Modified : 02 Jan, 2019 09:05 am
revenue-of-gst-for-december-is-rs-94-726-crore

சரக்கு -சேவை வரி மூலம் (ஜிஎஸ்டி) மத்திய, மாநில அரசுகளுக்கு டிசம்பர் மாதம் மொத்தம் 94,726 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. 

இதில், மத்திய ஜிஎஸ்டி (சிஜிஎஸ்டி) ரூ.16,442கோடி, மாநில ஜிஎஸ்டி (எஸ்ஜிஎஸ்டி) ரூ.22.459 கோடி, இறக்குமதி பொருள்களுக்கு விதிக்கப்படும் வரி உள்ளிட்ட ஐஜிஎஸ்டி ரூ. 47,936 கோடி மற்றும்செஸ் வரி ரூ 7,888  ஆகியவை அடங்கும்.

வழக்கம்போல், ஐஜிஎஸ்டி வரி வருவாயிலிருந்து மத்திய அரசின் பங்காக (சிஜிஎஸ்டி) ரூ.18,409 கோடி ரூபாயும், மாநில அரசுகளின் பங்காக (எஸ்ஜிஎஸ்டி) 14,793 கோடி ரூபாயும்  பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து, மத்திய அரசின் டிசம்பர் மாத ஜிஎஸ்டி வரி வருவாய் 43,851 கோடி ரூபாயாகவும், மாநில அரசுகளின் மொத்த வரி வருவாய் 46,252 கோடி ரூபாயாகவும் உள்ளது என மத்திய நிதியமைச்சகத்தின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close