ரூ.2,000 நோட்டுகள் அச்சிடுவது நிறுத்தம்?

  Newstm Desk   | Last Modified : 04 Jan, 2019 12:38 pm
printing-of-rs-2-000-is-stopped

ரூ.2,000 நோட்டுகளை புதிதாக அச்சிடுவதை மத்திய அரசு நிறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும் தற்போது புழக்கத்தில் உள்ள 2,000 ரூபாய் நோட்டுகள் செல்லும் எனவும் அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2016 -ஆம் ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதி, பணமதிப்பிழப்பு நடவடிக்கையை  மத்திய அரசு அறிவித்தது. அப்போது புழக்கத்தில் இருந்த உயர்மதிப்பு ரூபாய் நோட்டுகளான 500, 1,000 -த்தை மத்திய அரசு திரும்ப பெற்றது. அதனால் ஏற்பட்ட பணநெருக்கடியை சமாளிக்க புதிதாக 2,000 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டன.

உயர்மதிப்புடைய நோட்டுகளை செல்லாது என அறிவித்துவிட்டு, அதைவிட அதிக மதிப்புள்ள 2,000 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டுள்ளது, பணப்பதுக்கலுக்கும், கருப்பு பணம் மேலும் பெருகவும்தான் வழி வகுக்கும் என, பொருளாதார நிபுணர்களும், எதிர்க்கட்சிகளும் மத்திய அரசை விமர்சித்து வந்தன.

இந்த நிலையில், கடந்த 2018 மார்ச் மாதம், நாட்டில் புழக்கத்தில் இருந்த வெவ்வேறு மதிப்பிலான   ரூபாய் நோட்டுகளின் 2,000  ரூபாய் நோட்டின் பங்கு 37 சதவீதம் இருந்தது. இருப்பினும் சென்னை,  மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இந்த உயர்மதிப்பு நோட்டுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது.

இதையடுத்து தற்போது  2,000 ரூபாய் நோட்டுகளை புதிதாக அச்சிடுவதை நிறுத்தும் முடிவை மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் நிறுத்தியுள்ளதாக தகலல்கள் வெளியாகியுள்ளன.

முடிவெடுக்கவில்லை: இதனிடையே, 2,000 ரூபாய் நோட்டுகளை புதிதாக அச்சிடுவது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. தற்போது இந்த நோட்டுகள் தேவைக்கு அதிகமாகவே புழக்கத்தில் உள்ளன என மத்திய அரசு உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close