சிறு நிறுவனங்களை ஊக்குவிக்க ஜி.எஸ்.டி.,யில் மாற்றம்!

  Newstm Desk   | Last Modified : 10 Jan, 2019 04:25 pm
major-relief-for-small-business

நாட்டின் சிறு, குறு மற்றும் நடுத்த தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்காவும், தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் வகையிலும், ஜி.எஸ்.டி., வரி விதிப்பு முறையில் அதிரடி சலுகைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.

டில்லியில் நடந்த ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்திற்கு பின், வர்த்தகர்களுக்கான வரிச் சலுகை குறித்து, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியதாவது:

நாட்டின் வட கிழக்கு மாநிலங்களை சேர்ந்த வர்த்தகர்கள், ஜி.எஸ்.டி., வரி செலுத்துவதற்கான ஆண்டு வர்த்த உச்ச வரம்பு, 10 லட்சம் ரூபாயிலிருந்து, 20 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

பிற மாநிலங்களில் இந்த வரம்பு, 20 லட்சம் ரூபாயிலிருந்து, 40 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பலன் அடைவதுடன், நாட்டில் தொழில்முனைவோர் எண்ணிக்கையும் அதிகரிக்கும். 

அதாவது, ஆண்டுக்கு, 20 லட்சம் ரூபாய் வரை வர்த்தகம் செய்யும் வர்த்தகர், ஜி.எஸ்.டி., வரம்புக்குள் வரமாட்டார் என்ற நிலை தற்போது உள்ள நிலையில், அந்த வரம்பு, 40 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. 

ஜி.எஸ்.டி., தொகுப்பு சலுகை பெறுவதற்கான வரம்பு, ஒரு கோடி ரூபாயிலிருந்து, 1.5 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. 

ரியல் எஸ்டேட் மற்றும் லாட்டரி வர்த்தகத்தை ஜி.எஸ்.டி., வரம்புக்குள் கொண்டுவருவது குறித்து ஆலோசிக்க  
சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் அது குறித்து முடிவு எடுக்கப்படும்.

 கேரளாவில் சமீபத்தில் ஏற்பட்ட இயற்கை சீற்றத்தின் காரணமாக, மாநில நலன் கருதி, கூடுதலாக ஒரு சதவீதம் வரி வசூல் செய்ய, அந்த மாநில அரசுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close