பேடிஎம்-இன் ரூ.7,500 வரையிலான கேஷ்பேக் அதிரடி ஆஃபர்! எப்படி பெறுவது?

  Newstm Desk   | Last Modified : 18 Jan, 2019 12:44 pm
paytm-offers-up-to-rs-7-500-cashback-on-petrol-diesel-purchase

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை செய்யும் பிரபல செயலிகளில் ஒன்றான  பேடிஎம்(Paytm) தனது வாடிக்கையாளர்களுக்கு ரூ.7,500 வரையிலான கேஷ் பேக் ஆஃபரை வழங்குகிறது. வாகனங்களுக்கு பெட்ரோல்,டீசல் போடும் போது பேடிஎம் ஆப் மூலமாக பணப்பரிவர்த்தனை செய்தால் ரூ.7,500 வரையிலான கேஷ் பேக் ஆஃபரை பெறலாம் என அதிரடி ஆஃபர் ஒன்றை அறிவித்துள்ளது. 

மேலும், இதன் வேலிடிட்டி அடுத்த ஆண்டு அதாவது 2019 ஆகஸ்ட் 1ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக பெட்ரோல், டீசல் விலையில் அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்து வருவதால் இதுபோன்ற ஒரு ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. 

எப்படி இந்த கேஷ்பேக் ஆபரை பெறுவது?

►  பெட்ரோல் பங்குகளில் பேடிஎம் ஆப் 'QR code' ஸ்கேன் செய்து முதல் பணப்பரிவர்த்தனை செய்த பிறகு, மின்கட்டணம் செலுத்துவதற்கான ரூ.50 கேஷ்பேக் ஆஃபர் வழங்கப்படும். இதற்கான ப்ரோமோ கோட்: PETROLBIJLI .அந்த மின் கட்டணத்தையே பேடிஎம் ஆப் மூலமாக செலுத்தினால் மேலும் ரூ.10 ஆஃபர் வழங்கப்படும். இதற்கு குறைந்தது ரூ.750 மின்கட்டணம் இருக்க வேண்டும். 

►  இரண்டாவது முறையாக பெட்ரோல் பங்கில் பேடிஎம் ஆப் பணப்பரிவர்த்தனைக்கு பிறகு, மூவி டிக்கெட்டுக்கான ரூ.100 கேஷ்பேக் ஆஃபரை பெற்றுக்கொள்ளலாம். குறைந்தது 2 டிக்கெட்டை புக் செய்ய வேண்டும். இதற்கான ப்ரோமோ கோட்: PETROL100

►  மூன்றாவது பணப்பரிவர்த்தனைக்கு பிறகு, ரூ.350 வரையிலான கேஷ்பேக். ரூம் புக் செய்துகொள்ள இதனை பயன்படுத்தலாம். ப்ரோமோ கோட்: PETROL350

►  நான்காவது முறை பணப்பரிவர்த்தனைக்கு பிறகு, DTH  ரீசார்ஜ் செய்ய ரூ.25 கேஷ்பேக் ஆஃபர்.  ப்ரோமோ கோட்: PETROLDTH

►  ஐந்தாவது பணப்பரிவர்த்தனைக்கு பிறகு, மூவி டிக்கெட்டுக்கான ரூ.200 கேஷ்பேக் ஆஃபரை பெற்றுக்கொள்ளலாம். குறைந்தது 2 டிக்கெட்டை புக் செய்ய வேண்டும். இதற்கான ப்ரோமோ கோட்: PETROL200

►  ஆறாவது பணபரிவர்தனைக்கு பிறகு, ரூ.25 கேஷ்பேக் ஆஃபரை பெற்றுக்கொள்ளலாம். குறிப்பிட்ட பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல் போடுவதற்கு இதனை உபயோகித்துக்கொள்ளலாம். 

►  அதேபோன்று 10வதில் இருந்து ஒவ்வொரு 10வது பணபரிவர்த்தனைக்கும் ரூ.1350 வரையிலான ஆஃபரை வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ளும் வசதி உள்ளது. இதற்கான  ப்ரோமோ கோடுகள் அவ்வப்போது உங்களது ஆப்பில் வரும். இந்த தொகையை ரயில் மற்றும் விமானத்தில் பயணம் செல்ல டிக்கெட் புக் செய்துகொள்ளலாம். 

►  இதன்மூலம் மொத்தமாக ரூ.7,500 வரையிலான கேஷ்பேக் கிடைக்கும் வகையில் ஆஃபர் வழங்கப்படுகிறது. 

►  முதல் பணபரிவர்த்தனைக்கு பிறகு, உங்களது மொபைல் ஆப்பில் 'Cashback offers' என்ற செக்ஷனுக்கு சென்று விபரங்களை தெரிந்துகொள்ளலாம்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close