ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு ஜியோவின் அதிரடி சலுகை!

  Newstm Desk   | Last Modified : 29 Jan, 2019 12:25 pm
jio-celebrations-pack-for-prepaid-mobile-users-offers-10gb-data-for-free

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தமது விழாக்கால திட்டத்தின்கீழ், ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு 10 ஜிபி டேட்டா இலவச சலுகையை அறிவித்துள்ளது.

நாட்டின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ, குடியரசு தினத்தையொட்டி தமது மொபைல்ஃபோன் வாடிக்கையாளர்களுக்கு கடந்த 24 -ஆம் தேதி முதல் 28 -ஆம் தேதி வரை அதிரடி சலுகையை அறிவித்திருந்தது.

தற்போது இச்சலுகை மேலும்  5 நாள்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்படி இன்று முதல்  பி்ப்ரவரி 2 -ஆம் தேதி வரை, ஜியோ நிறுவனத்தின் ப்ரீபெய்டு வாடிக்கையாளர்கள் நாள் ஒன்றுக்கு தலா 2 ஜிபி டேட்டா என்ற வீதம்  மொத்தம் 10 ஜிபி டேட்டாவை இலவசமாக பெறலாம்.

4ஜி மொபைலுக்கான இச்சலுகையை பெற, வாடிக்கையாளர்கள் தனியாக ரீசார்ஜ் கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை.MyJio app-ஐ தங்களது மொபைலில் பதிவிறக்கம் செய்து அதில் விண்ணப்பித்தால் போதும்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close