அமேசான் நிறுவனத்தின் இயக்குநராகிறார் இந்திரா நூயி!

  Newstm Desk   | Last Modified : 26 Feb, 2019 05:49 pm
indra-nooyi-joins-amazon-board

பெப்சிகோ நிறுவனத்தின் முன்னாள் தலைமைச் செயலதிகாரி இந்திரா நூயி, அமேசான் நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவராகிறார். இதன் மூலம் 11 இயக்குநர்கள் கொண்ட குழுவில் இருக்கும் பெண் தலைவர்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது. 

உலக அளவில் புகழ்பெற்ற குளிர்பான நிறுவனமான பெப்சிகோ நிறுவனத்தின் தலைவராக இருந்தார் இந்திரா நூயி. இவர் 1994ல் பெப்சிகோ நிறுவனத்தில் சேர்ந்தார். 2001ல் தலைமை நிர்வாக அதிகாரியாக(CEO) பதவி உயர்வு பெற்றார். தொடர்ந்து 2004ம் ஆண்டு தலைமை செயல் மற்றும் நிர்வாக அதிகாரி(President &CEO) ஆனார். தொடரந்து 24 ஆண்டுகள் பெப்சிகோவில் இருந்த அவர், கடந்த அக்டோபர் மாதம், அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பதவியில் இருந்து விலகினார். 

இதைத்தொடர்ந்து தற்போது இந்திரா நூயி அமேசான் நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவராக ஆகிறார். அமேசானில் 11 இயக்குநர்கள் கொண்ட குழுவில் இந்திராவும் இடம் பெற உள்ளார்.  கடந்த மாதம் ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் தலைவர் ரோசாலிந்த் ப்ரூவர் அமேசான் இயக்குநர் குழுவில் சேர்க்கப்பட்டார். 

தற்போது இந்திரா நூயியையும் சேர்த்து அமேசான் இயக்குநர்கள் குழுவில் இருக்கும் பெண் தலைவர்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

newstm.in

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close