3 வங்கிகளுக்கு 8 கோடி ரூபாய் அபராதம்!

  Newstm Desk   | Last Modified : 05 Mar, 2019 05:01 pm
rbi-imposed-rs-8-crore-fine-on-3-banks

பணப்பரிவர்த்தனை தொடர்பான, இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) விதிமுறைகளை முறையாக பின்பற்றாத காரணத்துக்காக, யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா, கர்நாடக வங்கி, கரூர் வைஸ்யா வங்கி ஆகியவற்றுக்கு மொத்தம் ரூ. 8 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கியின் ரூ.14 ஆயிரம் கோடி நிதி மோசடி வழக்கில், ஸ்விப்ட் எனும்  மென்பொருளை தவறாக பயன்படுத்தி, சர்வதேச வங்கிப் பணப்பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது தெரிய வந்தது.

இதையடுத்து, இந்த மென்பொருளை முறையாக பயன்படுத்தாத வங்கிகள் மீது இந்திய ரிசர்வ் வங்கி கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்த நிலையில், ஸ்விப்ட் மென்பொருளை முறையாக பயன்படுத்தாத காரணத்துக்காக, கர்நாடக வங்கி, யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா, கரூர் வைஸ்யா வங்கி ஆகியவற்றுக்கு முறையே ரூ. 4 கோடி, ரூ. 3 கோடி, ரூ.1 கோடி என மொத்தம் 8 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

இந்தத் தொகையை இரண்டு வாரத்துக்குள் செலுத்த வேண்டும் என்றும் ஆர்பிஐ உத்தரவிட்டுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close