சரிந்தது தங்கத்தின் இறக்குமதி: மத்திய அரசு தகவல் 

  முத்து   | Last Modified : 24 Mar, 2019 03:33 pm
gold-imports-slide-5-5-per-cent-during

2018 ஏப்ரல் - 2019 பிப்ரவரி ஆகிய காலகட்டத்தில் நம் நாட்டின் இறக்குமதி செய்யப்படும் தங்கத்தின் அளவு 5.5 சதவீதம்  சரிந்து, 29.5  பில்லியன் டாலராக (அமெரிக்க டாலர்) குறைந்துள்ளது என்று மத்திய வர்த்தக அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. 2017-18-ஆம் ஆண்டுகளில்,  இதே காலகட்டத்தில் மொத்தம் 31.2 பில்லியன் டாலர் மதிப்புள்ள உலோகம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.

மேலும்,  2018 அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் தங்கம் இறக்குமதி 38.16 சதவீதம் அதிகரித்து 2.31 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளதாகவும், இது பிப்ரவரி மாதத்தில் 10.8 சதவிகிதமாக 2.58 பில்லியன் டாலராக சுருங்கியதாகவும் தெரிவித்துள்ளது.

உலக சந்தையில் மஞ்சள் உலோகத்தின் விலை குறைந்ததாலும், தங்கத்தின் இறக்குமதி சரிவிற்கு காரணமாக இருக்கலாம் என்று வர்த்த நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

ரத்தினங்கள் மற்றும் ஆபரண நகை ஏற்றுமதியின் அளவு 6.3 சதவீதம் சரிந்து 28.5 பில்லியன் டாலர் (அமெரிக்க டாலர்) அளவுக்கு குறைந்து வர்த்தகமாகியுள்ளது. நடப்பு நிதியாண்டின் 11 மாதங்களில், இது இந்த சரிவு ஏற்பட்டுள்ளது.

2017-18-ஆம் ஆண்டில் நாட்டின் மொத்த தங்க இறக்குமதி 22.43 சதவீதம் அதிகரித்து 955.16 டன்னாக அதிகரித்து இருந்துள்ளது. இது 2016-17-ஆம் ஆண்டில் 780.14 டன்னாக இருந்தது என்றும் வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close