மூன்றாவது பெரிய வங்கியாக உருவெடுத்துள்ள பேங்க் ஆஃப் பரோடா!

  ஸ்ரீதர்   | Last Modified : 01 Apr, 2019 01:29 pm
dena-bank-vijaya-bank-become-part-of-bank-of-baroda

விஜயா வங்கி, தேனா வங்கி ஆகியவை இன்று முதல்,  பேங்க் ஆஃப் பரோவுடன் முறைப்படி இணைக்கப்படுகின்றன. இதையடுத்து, நாட்டிலேயே மூன்றாவது பெரிய வங்கியாக இவ்வங்கி உருவெடுத்துள்ளது.

இந்த வங்கிகள் இணைப்பு நடவடிக்கை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, கூடுதல் செலவினத்தை எதிர்கொள்வதற்காக பேங்க் ஆப் பரோடா வங்கிக்கு 5,042 கோடி ரூபாயை மூலதனமாக வழங்க கடந்த வாரம் மத்திய அரசு முடிவு செய்தது

இந்த நிலையில், ஏப்ரல் ஒன்றாம் தேதியான இன்று முதல் விஜயா வங்கி, தேனா வங்கி ஆகியவை பேங்க் ஆஃப் பரோடாவின் கிளைகளாக செயல்படும் என்றும், இந்த இரு வங்கிகளின் வாடிக்கையாளர்களும் இனி, பேங்க் ஆஃப் பரோடா வங்கி வாடிக்கையாளர்களாக கருதப்படுவார்கள் எனவும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

இந்த இணைப்பு நடவடிக்கை மூலம் பொதுத்துறை வங்கிகளின் எண்ணிக்கை 18 ஆக குறைந்திருப்பதுடன், எஸ்பிஐ, ஐசிஐசிஐ வங்கிக்கு அடுத்த நாட்டிலேயே 3-வது பெரிய வங்கியாக பேங்க் ஆஃப் பரோடா உருவெடுத்துள்ளது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close