ரெப்போ வட்டி விகிதம் 0.25% குறைப்பு! -ஆர்.பி.ஐ

  Newstm Desk   | Last Modified : 04 Apr, 2019 12:01 pm
rbi-cuts-repo-rate-by-25-base-points-to-6-from-6-25

வங்கிகளுக்கு அளிக்கும் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதம் (ரெப்போ ரேட்) 0.25 சதவீதம் குறைக்கப்படுவதாக இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதாவது, ரெப்போ விகிதம் தற்போதுள்ள 6.25 சதவீதத்திலிருந்து 6.0 சதவீதமாக குறைக்கப்படுகிறது. 

ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் தலைமையில் இன்று நடைபெற்ற ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை ஆய்வுக் கூட்டத்தில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த பிப்ரவரி மாதம் 6.5% லிருந்து 6.25% ஆக குறைக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் 0.25% குறைக்கப்பட்டுள்ளது. 

ரெப்போ வட்டி விகிதம் குறைந்துள்ளதால், வங்கிகளில் வாடிக்கையாளர்களின் வீட்டுக்கடன், வாகனக்கடன் உள்ளிட்டவற்றுக்கான வட்டி விகிதம் கணிசமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

newstm.in 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close