வாட்ஸ் ஆப் பயனாளர்களை கவர வரும் 5 புதிய வசதிகள்!

  Newstm Desk   | Last Modified : 05 Apr, 2019 11:10 am
5-new-whatsapp-for-android-features-we-can-t-wait-for-in-2019

உலக அளவில் தகவல் பரிமாற்றத்திற்காக அதிகம் பயன்படுத்தக்கூடிய ஒரு மொபைல் ஆப் 'வாட்ஸ் ஆப்'. கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை கொண்ட வாட்ஸ் ஆப் நிறுவனம், தங்களது செயலியில், வாடிக்கையாளர்களை கவரக்கூடிய பல்வேறு மாற்றங்களை தொடர்ந்து வழங்கி வருகிறது. 

அந்த வகையில், வாட்ஸ் ஆப்பில் இந்தாண்டு கீழ்குறிப்பிட்டுள்ள 5 வசதிகள் வரவுள்ளன. 

டார்க் மோட் :

வாட்ஸ் ஆப் -பின் இந்த டார்க் மோட் வசதிக்காக வாடிக்கையாளர்கள் வெகு நாட்களாக காத்திருக்கின்றனர் என்று சொன்னால் அது மிகையாகாது.  பிரவுசர்கள், மெசஞ்சர் உள்ளிட்ட பல்வேறு ஆப்களில், 'டார்க் மோட்' என்ற வசதி ஏற்கனவே வந்துவிட்ட நிலையில், வாட்ஸ் ஆப்-இல் இது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதற்கான பீட்டா வெர்ஷன் சோதனைகளும் சமீபத்தில் வெற்றி கண்டுள்ளன. எனவே விரைவில் நமது வாட்ஸ் ஆப்-இல் டார்க் மோட் வசதியை பெறலாம். 

'டார்க் மோட்' வசதியின் மூலம், வாட்ஸ் ஆப்-இன் பேக்கிரவுண்ட் முழுவதும் லைட் பிளாக் கலராக மாறிவிடும். இதன்மூலமாக இரவில், வெளிச்சம் குறைந்த அளவில் வாட்ஸ் ஆப்பை பயன்படுத்தலாம். மொபைலை கண் கூசாமல் பயன்படுத்த முடியும். பேட்டரி சார்ஜ் சேமிக்கப்படும். பாதுகாப்பானதாகவும் இருக்கும். 

பிங்கர் பிரிண்ட்:

பயனாளர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, விரல் ரேகை(ஃபிங்கர் பிரிண்ட்) பதிவை வாட்ஸ் ஆப் நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது. இதற்கான சோதனைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில், முதற்கட்டமாக குறிப்பிட்ட பகுதி பயனாளர்களுக்கு வழங்கப்படவுள்ளது. அதைத்தொடர்ந்து, பயனாளர்களின் தேவைக்கேற்ப ஃபிங்கர் பிரிண்ட் அனைத்து வகையான மொபைல்களிலும் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

3டி டச்: 

இந்த வசதி முழுக்க முழுக்க ஐபோன் பயனாளர்களுக்கு மட்டுமேயான ஒரு வசதியாகும். இதன்படி, ஐபோன் பயனாளர்கள் '3டி டச்' வசதியை கொண்டு வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ்-களை காண முடியும். அப்படி '3டி டச்' முறையில் பார்க்கும் ஸ்டேட்டஸ், அந்த ஸ்டேட்டஸை வைத்தவருக்கு நீங்கள் பார்த்த தகவல் செல்லாது. அதாவது, அவர்களது ஸ்டேட்டஸை பார்த்தவர்கள் லிஸ்டில் உங்களது பெயர் வராது. இதன்மூலம், ஒருவரது ஸ்டேட்டஸை அவருக்கு நீங்கள் மறைமுகமாக பார்க்கலாம். 

வாய்ஸ் மெசேஜ்: 

வாட்ஸ் ஆப்-இல் வாய்ஸ் மெசேஜ் வசதி அனைவரும் பெரும்பாலாக பயன்படுத்தக்கூடிய ஒன்று. வழக்கமாக, ஒருவர் அனுப்பிய வாய்ஸ் மெசேஜ்ஜை டவுன்லோட் செய்து கேட்க வேண்டும். அதன்பின்னர், தொடர்ச்சியாக எவ்வளவு வாய்ஸ் மெசேஜ் அனுப்பினாலும் அதனை, தனித்தனியே டவுன்லோட் செய்து, தனித்தனியாக கேட்க வேண்டும். 

ஆனால், வாய்ஸ் மெசேஜ் அப்டேட் படி, இனிமேல், ஒரு சாட்-இல் அனைத்து வாய்ஸ் மெசேஜ்-களையும் தொடர்ச்சியாக நாம் கேட்க முடியும். ஒரு மெசேஜ் முடிந்தவுடன் மெல்லியதாக ஒரு ஒலி எழுப்பப்படும், அதைதொடர்ந்து அடுத்தடுத்த வாய்ஸ் மெசேஜ்களை கேட்கும் வசதி விரைவில் அறிமுகமாகவுள்ளது. 

ரேங்க்கிங்:

உங்களுடன் தொடர்பில் உள்ள காண்டாக்ட்டை பொறுத்து அவற்றுக்கு ரேங்க் கொடுக்கப்படும். அதாவது, யாருடன் நீங்கள் அதிகமாக வாட்ஸ் ஆப், சாட் செய்கிறீர்களோ, அதன்படி, ஆட்டோமேட்டிக் முறையில் ரேங்க் கொடுக்கப்படும். இதன் மூலம் நீங்கள் யாருடன் அதிகமாக தொடர்பில் உள்ளீர்கள் என தெரிந்துகொள்ளலாம்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close