உபர் ஈட்ஸ் நிறுவனத்தை வாங்கும் ஸ்விக்கி; இழுபறியில் பேச்சுவார்த்தை!

  Newstm Desk   | Last Modified : 05 Apr, 2019 12:35 pm
swiggy-ubereats-can-t-tally-numbers-for-a-deal

உபர் ஈட்ஸ் நிறுவனத்தை வாங்குவது தொடர்பான நிதி மற்றும் வரிவிதிப்பு விதிமுறைகளை சோமட்டோ ஏற்றுக்கொள்ள மறுப்பதால், இரு நிறுவனங்களுக்கும் இடையேயான பேச்சுவார்த்தை இழுபறி நிலையில் நீடிக்கிறது. 

இந்தியாவில் உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் தற்போது நல்ல வளர்ச்சியை கண்டுவருகின்றன. அவற்றில் சோமட்டோ, ஸ்விக்கி நிறுவனங்கள் மக்களிடையே நல்ல பிரபலமாகியுள்ளன. இதில் பெரும்பாலாக இந்தியா முழுவதும் சேவை வழங்கும் ஸ்விக்கி நிறுவனம், உபர் ஈட்ஸை வாங்கும் நோக்கில், இரு நிறுவனத்திற்கும் இடையே பேச்சுவார்த்தையானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

சோமட்டோ, ஸ்விக்கி நிறுவனங்களை ஒப்பிடுகையில், உபர் ஈட்ஸ் வருவாயில் சரிவை சந்தித்து வருகிறது. எனவே, உபர் ஈட்ஸ் நிறுவனத்தை விற்கும் முயற்சியில், அதனை வாங்க ஸ்விக்கி முன்வந்துள்ளது. 

ஆனால், உபர் ஈட்ஸை விற்பது தொடர்பான நிதி மற்றும் வரிவிதிப்பு விதிமுறைகளை சோமட்டோ நிறுவனம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. இதனால் பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறி நிலை நீடிக்கிறது. 

தற்போது சோமட்டோ, ஸ்விக்கி நிறுவனங்கள் மாதத்திற்கு 30 முதல் 35 மில்லியன் ஆர்டர்களை பெறுவதாகவும், உபர் ஈட்ஸ் 10 முதல் 14 மில்லியன் ஆர்டர்களை பெறுவதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close