ஏ.டி.எம்-ல் பண தட்டுப்பாடு ஏன்? டாப் 10 நிகழ்வுகள்

  ஐஸ்வர்யா   | Last Modified : 18 Apr, 2018 06:43 am

நாடு முழுக்க ஏ.டி.எம் மையங்கள் பணம் இல்லாததால் மூடப்பட்டுள்ளது. இதனால், மீண்டும் பண மதிப்பு இழப்பு அறிவிப்பின்போது ஏற்பட்ட நிலை வந்துவிடுமோ என்று மக்கள் பீதியில் உள்ளனர்.

இந்தநிலையில், கர்நாடக சட்டமன்ற தேர்தலில் வாக்காளர்களுக்கு விநியோகிக்க பணம் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக நெட்டிசன்கள் புகார்வாசிக்கின்றனர். இதற்கு என்ன ஆதாரம் என்றுதான் தெரியவில்லை.

பண தட்டுப்பாடு பற்றிய டாப் 10 நிகழ்வுகளைப் பற்றி பார்ப்போம்...

மத்தியபிரதேசம், டெல்லி, பீகார், குஜராத், தெலங்கானா மற்றும் உத்தர பிரதேசத்தின் பல பகுதிகள், போபால், சூரத், ஹைதராபாத், டெல்லி ஆகிய பல்வேறு பகுதிகளில் ஏடிஎம்களில் பணம் இல்லாத சூழல் நிலவுகிறது. வடமாநிலங்கள் மட்டுமின்றி தமிழகத்தில் திருவண்ணாமலை, வேலூர், ஆம்பூர், வாணியம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் ஏ.டி.எம்-களில் பணம் வரவில்லை என புகார்கள் எழுந்தன.

பண தட்டுப்பாடு தொடர்பாக நிருபர்களிடம் பேசிய மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, இது ஒரு தற்காலிகத் தட்டுப்பாடு என்றும், விரைவில் சரியாகும் என்றும், மாநிலங்கள் வாரியாக ரிசர்வ் வங்கி அதிகாரிகள் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டு பிரச்னை சரிசெய்யப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

பண மதிப்பிழப்புக்கு பின்பு மக்கள் வங்கிகளில் பணத்தை டெபாசிட் செய்ய பயப்படுகின்றனர். வங்கிகளில் பண டெபாசிட் குறையும் போது ஏ.டி.எம்களில் நிரப்ப பணம் இல்லாமல் போகிறது. கேஷ்லஸ் எக்கானாமி வளர்ச்சியடைந்ததும் இந்த தீடிர் தட்டுப்பாட்டுக்கு காரணமாக கண்டறியபட்டுள்ளது.

பணதட்டுப்பாட்டை சமாளிக்க 500 ரூபாய் நோட்டுகளை 5 மடங்கு கூடுதலாக அச்சடித்து புழக்கத்தில் விடவும் ரூ. 2000 நோட்டுகளின் பயன்பாட்டைக் குறைக்கவும் ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளதாக மத்திய பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சுபாஷ் சந்திரா கார்க் தெரிவித்துள்ளார்.

டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் பொருட்டு கேஷ்லஸ் எக்கானாமியை நோக்கி பயணிக்கும் மத்திய அரசு அறிவுறுத்தலால் வங்கிகளுக்கு கொடுக்கும் பணத்தை ரிசர்வ் வங்கி குறைத்ததாக கூறப்படுகிறது.

பணமதிப்பிழப்புக்கு பின் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ரூ. 500, ரூ.2000 மற்றும் ரூ. 200 நோட்டுகளை ஏ.டி.எம்களில் வழங்கும் தொழில்நுட்பம் இன்னும் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை. இதனால்தான் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.

வழக்கத்துக்கு மாறாக பணத்தேவை அதிகரித்துள்ளதால் பணத்தட்டுப்பாடு அதிகரித்துள்ளதாகவும், மக்களிடம் பணமாக செலவு செய்யும் பழக்கம் அதிகரித்துள்ளதாகவும் நிதிதுறை புது விளக்கம் அளித்துள்ளது.

பணமதிப்பிழப்பின்போது 50 நாளில் பணத்தட்டுப்பாடு பிரச்னை சரியாகிவிடும் என பிரதமர் உறுதியளித்தார். ஆனால் ஒன்றரை ஆண்டுகளாகியும் பணத்தட்டுபாடு தீராத பிரச்னையாக தொடர்வதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் குற்றஞ்சாட்டினர்.

ரிசர்வ் வங்கி பண நிர்வகிப்பை முறையாக பராமரிபதே பணத்தட்டுப்பாட்டுக்கான நிரந்தர தீர்வு என்றும், எந்த பகுதிக்கு எவ்வளவு பணம் வேண்டும் என தேவை அறிந்து பணம் அளித்தால் இதுபோன்ற பிரச்னை இனி வராது என்றும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியின் தலைவர் ராஜ்னிஷ் குமார் சின்ஹா தெரிவித்துள்ளார்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.