ஆர்டிபிசியல் இன்டலிஜென்ஸ்:  30% வேலைவாய்ப்பு பறிபோகும்..?

  Newstm Desk   | Last Modified : 02 May, 2019 12:28 pm
artificial-intelligence-may-lose-30-of-job-opportunity

ஆர்டிபிசியல் இன்டலிஜென்ஸினால் உலகம் முழுக்க 30% மனித வேலைவாய்ப்பு பறிபோகும் என்ற எச்சரிக்கையை அமெரிக்காவை சேர்ந்த மெக்கிங்ஸ்லி, ப்ரூக்கிங் நிறுவனங்களின் ஆய்வு அறிக்கை தெரிவித்து பதற்றத்தை உருவாக்கி உள்ளது. 

இது போன்ற பதற்றம் 80'களில் கம்யூட்டர் தொழில்நுட்பம் தொழிற்சாலைகளில் நுழைந்த போதும் இருந்தது ஆனாலும் தகவல் தொழில்நுட்பம் புதிய வகையிலான வேலைவாய்ப்புகளை  அதிகம் உருவாக்கின. 

ஆடோமேஷன் எனப்படும் நெக்ஸ்ட் ஜெனரேஷன் தொழில்நுட்பம் பாதிப்பு ஏற்படுத்தபோவது க்ளர்க் வெலவல் ஜாப்ஸ் என சொல்லபடும் மத்திய தர வேலைகளைதான். இந்த நிலை வேலைகளுக்கு பெரிய புத்தி கூர்மையோ உடல் உழைப்போ தேவைபடாது. 

இந்திய ஐ.டி மற்றும் ஐ.டி சார்ந்த துறையை பொறுத்தவரை மெயின்டனென்ஸ் ப்ராஜெக்ட்ஸ் என சொல்லபடும் பராமரிப்பு வேலைகள், சாப்ட்வேர் டெஸ்டிங், பிபிஓ, பேக் ஆபிஸ், கஸ்டமர் கேர் சார்ந்த வேலைவாய்ப்புகள் ஆடோமேஷனால் பாதிப்படைய அதிக வாய்ப்புகள் உள்ளது. 

நம் நாட்டில் தற்போது நடைபெற்று வரும் மக்களவைத் தேர்தல் முடிவுக்குப் பிறகு பல கம்பெனிகள் ஆட்குறைப்பு முடிவுகளை எடுக்க காத்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close