ஜிஎஸ்டி ஏமாற்றுகாரர்களை கண்டறிய உதவும் புதிய மொபைல் ஆப்..!

  எஸ்.ஆர்.பி   | Last Modified : 02 May, 2019 12:48 pm
new-mobile-app-for-gst-payers

கடந்த நாட்களில் வாட், கலால் வரி, சேவை வரி, மத்திய விற்பனைவரி, என வரி வசூரலிக்கப்பட்டு வந்தன. இந்த வரிகளுக்கு பதிலாக கடந்த 2017 ஆண்டு ஜுலை 1ஆம் தேதி ஜி.எஸ்.டி என்னும் புதிய ஒற்றை வரி மட்டுமே வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. 

ஜி.எஸ்.டியில் காம்போஸிசன் ஸ்கீமின் கீழ் வரும் பல நிறுவனங்கள் 'பில்'லில்  ஜிஎஸ்டி என குறிப்பிட்ட கட்டணத்தை சேர்த்து வாடிக்கையாளரிடம் பணமும்  பெற்றுகொண்டு அரசையும் ஏமாற்றி வருவது பரவலாக பேசப்படுகிறது. இப்படி ஜி.எஸ்.டி. வரியை செலுத்தாத வியாபாரிகளை கண்டறிய புதிய செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

ஜி.எஸ்.டி. வரியை செலுத்தாத வியாபாரிகளை கண்டறிய ஐரிஸ் எனப்படும் நிறுவனம் புதிய செயலி ஒன்றை உருவாக்கியுள்ளது. https://wiki.irisgst.com/peridot என்ற இந்த செயலியை கொண்டு எந்த ஒரு நிறுவனத்தின் ஜி.எஸ்.டி விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம்.  ஐ.எஸ்.ஓ தர சான்றிதழ் பெற்ற இந்த செயலியில் ஜி.எஸ்.டி ரிட்டன்ஸ் விவரங்களை தெரிந்து கொள்ளும் வசதியும் உள்ளது. இனி அனைத்து வியாபாரிகளும் ஜி.எஸ்.டி. வரியை செலுத்துவார்கள் என எதிர்பார்க்கலாம். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close