ஆன்லைன் பிட்டிங் கேம்... ட்ரீம்11 ஆப்.!

  எஸ்.ஆர்.பி   | Last Modified : 10 May, 2019 01:10 pm
online-bidding-game-dream-11-app

இலவச ஆன்லைன் விளையாட்டுகளை மட்டுமே அதிப்படியாக விரும்புகிறவர்கள் இந்தியர்கள்! ட்ரீம்11 ஆன்லைன் கேம் ஆப் நிறுவனம் ஹாங்காங்கை சேர்ந்த ஸ்டட்வீயூ என்ற நிறுவனத்திடம் $60 மில்லியன் டாலர்களை முதலீடாக பெற்று இந்தியாவின் முதல்  தனித்துவமான கேம்மிங் கம்பெனியாக உருவெடுத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த 2009ல் விளையாட்டு குழும வலைதளமாக ஆரம்பிக்கபட்டு பின் அது பெரிய  வெற்றியை தராத காரணத்தினால் ப்ரீமியம் என சொல்லப்படும் முதல் சில நிலைகள்  இலவசம் என்ற தொழில் மாதிரியை உதாரணமாகக் கொண்டு உருவாக்கபட்டதுதான் தற்போது செயல்பாட்டில் உள்ள ஆன்லைன் பிட்டிங் கேம் ட்ரீம் 11 ஆப்.

இந்த ஆப்பின் விளம்பர தூதராக கிரிக்கெட் வீரர் தோனி செயல்பட்டு வருகிறார். இந்த ஆஃப்பை உபயோகப்படுத்தி விளையாடுபவர்களில் 85% நபர் இலவச பயணாளிகள் ஆவர். மீதமுள்ள 15% நபர்கள் கிட்டதட்ட 7 கோடி பேரின் மாத சந்தா தலா 25ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், அது நிறுவனத்திற்கு 187 கோடியை ஈட்டிதருகிறது  என்று  நிறுவன தலைவர் ஹரீஷ் ஜெயின் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் கிராபிக்ஸ் மற்றும் விளையாட்டு ஆப் தொழில்களுக்கு முன்னுதாரணமாக செயல்பட்டு வருகிறது ட்ரீம்11 நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close