சம்பளத்தை குறைத்தாலும் பரவாயில்லை, நிறுவனத்தை மீட்டெடுங்க: ஊழியர்கள் கோரிக்கை

  Newstm Desk   | Last Modified : 10 May, 2019 01:59 pm
we-re-ready-to-work-for-less-salary-but-we-want-jet-airways-to-come-back-jet-airways-staffs

தாங்கள் முன்பு பெற்றதை விட குறைந்த ஊதியத்திற்கு வேலை செய்ய தயாராக இருப்பதாகவும், தங்கள் நிறுவனத்தை மீண்டும் இயக்கத்தில் கொண்டுவர உரிய நடவடிக்கை எடுக்கம்படி, ஜெட் ஏர்வேஸ் நிறுவன ஊழியர்கள், மஹாராஷ்டிரா மாநில முதல்வரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். 

விமான சேவையில் கொடி கட்டிப் பறந்த தனியார் நிறுவனமான ஜெட் ஏர்வேஸ் நிதிப் பற்றாக்குறை மற்றும் கடன் தொல்லையால், அனைத்து விமான சேவையையும் ரத்து செய்தது. இதையடுத்து, அந்த நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. 

அவர்களில் சிலர், வேறு விமான சேவை நிறுவனங்களில் பணிக்கு சேர்ந்துவிட்டாலும், பலர் இன்னமும் தாங்கள் பணியாற்றிய நிறுவனத்தை மீட்டெடுக்க போராடி வருகின்றனர். அவர்களில் ஒரு பிரிவினர், இன்று, மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்தி ரபட்னவிஸை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். 

அதில், ‛‛நாங்கள் முன்பு பெற்ற சம்பளத்தை விட குறைந்த சம்பளம் பெறவும் தயாராக இருக்கிறோம். ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் மீண்டும் செயல்பாட்டுக்கு வருவதைத் தான் விரும்புகிறோம். அதை மீட்டெடுத்து, தொடர்ந்து அந்த நிறுவனத்தில் பணியாற்றவே விரும்புகிறோம். எனவே, மத்திய, மாநில அரசுகள் இதில் போதிய உதவி செய்ய வேண்டும்’’ என வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close