ஹேக்கிங்: வாட்ஸ் ஆப்பை உடனே 'அப்டேட்' பண்ணுங்க- அவசர எச்சரிக்கை!

  முத்துமாரி   | Last Modified : 14 May, 2019 03:34 pm
whatsapp-wants-users-to-upgrade-app-urgently

வாட்ஸ் ஆப்பில் ஹேக்கர்கள் புகுந்துள்ளதால், பயனாளர்கள் தங்களது வாட்ஸ் ஆப்பை அப்டேட் செய்ய நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது. 

தகவல் பரிமாற்றத்திற்காக உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் உபயோகித்து வரும் வாட்ஸ் ஆப்பில் ஹேக்கர்கள் புகுந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதையடுத்து வாட்ஸ்அப் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல் ஒன்றை வழங்கியுள்ளது. அதன்படி வாட்ஸ் அப் பயனாளர்கள் தங்களது வாட்ஸ் அப்பை உடனடியாக 'அப்டேட்' செய்யும்படி அறிவுறுத்தியுள்ளது. இதன் மூலமாக நாடு முழுவதும் 1.5 பில்லியன் மக்கள் வாட்ஸ் ஆப்பை அப்டேட் செய்கின்றனர். 

வாட்ஸ் ஆப்பில் ஹேக் செய்ய ஹேக்கர்கள் குறிப்பிட்ட எண்களுக்கு கால் செய்தவுடன், அந்த மொபைல் போன்கள் ஹேக் ஆகி விடுகிறது. இதனை தவிர்க்க, பயனாளர்கள் தங்களது வாட்ஸ் ஆப்பை அப்டேட் செய்ய நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close