பெட்ரோல், டீசல் விலையை அறிய புதிய வசதி... ஐஓசி அறிமுகம்!

  முத்து   | Last Modified : 21 May, 2019 09:52 pm
the-price-of-petrol-and-diesel-by-sms-is-now-available-new-facility

பெட்ரோல், டீசல் விலையை வாடிக்கையாளர்கள் குறுஞ்செய்தி மூலம் தெரிந்து கொள்ளும் வசதியை இந்தியன் ஆயில் நிறுவனம் (ஐஓசி) அறிமுகம் செய்துள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை நிலவரத்தை பொருத்து, பெட்ரோல், டீசல் விலை அன்றாடம் ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது. எரிப்பொருள்களின் விலை நிலவரத்தை வாகன ஓட்டிகள் செய்திகள் மூலமோ, ஆன்-லைனிலோ. பெட்ரோல் பங்குகளுக்கோ சென்று தான் அறிய வேண்டியுள்ளது.

இந்த நிலையில், வாடிக்கையாளர்கள் குறுஞ்செய்தி மூலம் பெட்ரோல், டீசல் விலையை தெரிந்து கொள்ளும் வசதியை இந்தியன் ஆயில் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

அதன்படி, தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலையை அறிய, வாடிக்கையாளர்கள் தங்களது மொபைல்ஃபோனில் RSP 133593 என டைப் செய்து 92249 92249 என்ற எண்ணுக்கு SMS அனுப்பி, எரிப்பொருள்களின் அன்றாட விலை நிலவரத்தை தெரிந்து கொள்ளலாம்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close