வங்கி கணக்கு வைத்திருப்போருக்கு ஜாக்பாட்: ஆர்.பி.ஐ., அதிரடி அறிவிப்பு

  Newstm Desk   | Last Modified : 06 Jun, 2019 03:22 pm
rbi-slashes-the-charges-for-neft-and-rtgs

வங்கி கணக்கு வைத்திருப்பாேர், என்.இ.எப்.டி., மற்றும் ஆர்.டி.ஜி.எஸ்., முறையில், மற்றொரு வங்கி கணக்கிற்கு பணப் பரிமாற்றம் செய்யும் போது, வாடிக்கையாளர்களின் கணக்கிலிருந்து, வங்கிகள் பிடிக்கும் பரிவர்த்தனை கட்டணத்தை ரத்து செய்ய, இந்திய ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. 

வங்கி கணக்கு வைத்திருப்போர், வேறொரு வங்கி கணக்கிற்கோ அல்லது அதே வங்கியை சேர்ந்த வேறொரு கிளையில் உள்ள வங்கி கணக்கிற்கோ அல்லது வேறொருவரின் வங்கி கணக்கிற்கோ பணம் செலுத்த, என்.இ.எப்.டி., அல்லது ஆர்.டி.ஜி.எஸ்., முறையை பயன்படுத்துவது வழக்கம். 

வங்கிகள் அளிக்கும் இந்த சேவைக்கு, பரிவர்த்தனை கட்டணமாக குறிப்பிட்ட தொகை, வாடிக்கையாளர் வங்கி கணக்கிலிருந்து பிடித்தம் செய்யப்படுகிறது. இந்நிலையில், இன்டர்நெட் பேங்கிங் முறையை பிரபலப்படுத்தவும், டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கவும், வங்கிகள் பிடிக்கும் இந்த தொகையை ரத்து செய்ய, ஆர்.பி.ஐ., எனப்படும், இந்திய ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. 

அதே சமயம், ஏ.டி.எம்., இயந்திர பயன்பாட்டிற்காக பிடித்தம் செய்யப்படும் தொகையை மாற்றி அமைப்பது குறித்து ஆய்வு செய்ய தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், ஆர்.பி.ஐ., அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close