ரெப்போ ரேட் குறைப்பு: வீடு, வாகன கடனுக்கான வட்டி குறைய வாய்ப்பு

  Newstm Desk   | Last Modified : 06 Jun, 2019 07:22 pm
repo-rate-cut-by-rbi-home-loan-comes-down

வங்கிகளுக்கான ரெப்போ மற்றும் ரிவர்ஸ் ரெப்போ ரேட்டை, 0.25 சதவீதம் குறைத்து, ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன் மூலம், வங்கிகளில் வாடிக்கையாளர்கள் வாங்கிய, வீடு மற்றும் வாகனக் கடனுக்கான வட்டி குறைய வாய்ப்புள்ளது. 

வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடன் தொகை, அதற்காக அது பெறும் வட்டி விகிதம் உள்ளிட்டவற்றை நிர்ணயிப்பதற்காக நிதிக் கொள்கை கூட்டம், ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் தலைமையில் நடைபெற்றது. இதில், ரெப்போ மற்றும் ரிவர்ஸ் ரெப்போ ரேட்டை, 0.25 சதவீதம் குறைப்பதாக முடிவெடுக்கப்பட்டது. 

வங்கிகளுக்கான ரெப்போ, ரிவர்ஸ் ரெப்போ குறைக்கப்பட்டதால், வங்கிகளில் வாடிக்கையாளர்கள் பெற்றுள்ள வீடு, வாகன கடன் தொகைக்கான வட்டி விகிதம் குறைய வாய்ப்புள்ளது. இதனால், அவர்கள் மாதம் தோறும் செலுத்தும் இ.எம்.ஐ., தொகை குறையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 

புதிதாக கடன் வாங்குபவர்களுக்கும் இந்த அறிவிப்பு இன்ப அறிவிப்பாக இருக்க அதிக வாய்ப்புள்ளது. ரெப்போ, ரிவர்ஸ் ரெப்போ விகிதம் குறைக்கப்பட்டுள்ளதால், வங்கிகளும் இதன் பலனை வாடிக்கையாளர்களுக்கு அளிக்க வேண்டும் என, ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close