28 அமெரிக்க பொருட்கள் மீது கூடுதல் வரி- இன்று முதல் அமல்

  ஸ்ரீதர்   | Last Modified : 16 Jun, 2019 01:42 pm
india-imposes-higher-customs-duty-on-28-us-products

அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு கூடுதல் வரி விதிப்பை இந்தியா இன்று முதல் அமல்படுத்தியுள்ளது.

பாதாம், வால்நட், பருப்பு வகைகள் உள்ளிட்ட 28 பொருட்கள் மீது கூடுதல் வரி விதிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உருக்கு, அலுமினியம் ஆகியவற்றின் மீதான இறக்குமதி வரியை முறையே 25 சதவீதமாகவும் 10 சதவீதமாகவும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் அமெரிக்க அதிகரித்தது. 

அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அந்நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வால்நட்,  பருப்பு வகைகள், கருப்பு மற்றும் வெள்ளை கொண்டைக் கடலை ஆகிய பொருள்கள் மீதான சுங்க வரியை அதிகரிக்க இந்தியா கடந்த ஆண்டு ஜூன் மாதம் முடிவு செய்தது. 

உருக்கு, அலுமினியம் ஆகியவற்றின் மீதான இறக்குமதி வரியைக் குறைக்க வேண்டும் எனவும், விவசாயப் பொருள்கள், வாகன உதிரி பாகங்கள், பொறியியல் சாதனங்கள் ஆகியவற்றின் இறக்குமதியை அதிகரிக்க வேண்டும் எனவும் அமெரிக்காவிடம் இந்தியா கோரிக்கை விடுத்தது. 

ஆனால், தனது முடிவில் அமெரிக உறுதியாக இருந்தது. இந்நிலையில் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 28 பொருள்கள் மீதான வரியை உயர்த்துவதாக இந்தியா அறிவித்துள்ளது. இந்த வரிவிதிப்பு இன்று முதல் அமலுக்கு வருகிறது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close