பணம் செய்ய விரும்பு - பகுதி 5 ( ரூ.157 கோடி பரிசு, ஆனால் கடனாளி!)

  Newstm Desk   | Last Modified : 03 Jul, 2019 05:22 pm
special-article-about-financial-planning

கடந்த சில நாட்களில்,  வரவு -செலவு கணக்கு வைத்தல் - பட்ஜெட் , கடன் அட்டை , EMI - மாத  தவணை , 50-30-20 விதி  என பல விஷயங்களை பற்றி விவாதித்திருந்தோம். அதன் தொடர்ச்சியாக உலகமே உற்று நோக்கியுள்ள ஒரு நிகழ்வை உங்களுக்கு கூறுகிறேன்.

உலகின் தலை சிறந்த டென்னிஸ் வீரர்கள் யார் யார் என  தேடி பார்த்தால்,  இவர் பெயர் நிச்சயம் இடம் பிடித்திருக்கும். விம்பிள்டன் போட்டி நடந்த சமயம், தர வரிசையில் இல்லாத ஜெர்மனியை சேர்ந்த  17 வயதே ஆன ஒருவர், தேர்ந்த வீரர் ஒருவருடன் விளையாடுகிறார். 

தர வரிசையில் இல்லாத  ஒருவர் வெற்றி பெறுவார் என, எவராலும் யூகித்திருக்க முடியாது. ஒரு உலக சாதனை நிகழ்ந்தது. அது சமயம், மிக இளம் வயதில் விம்பிள்டன் ஒற்றையர் பட்டத்தை பெற்றவர் இவர் மட்டுமே. பிறகு  உலகமே இவரை தூக்கி கொண்டா,ட பத்தே ஆண்டுகளில், தன் திறமையை மிக நேர்த்தியாக செதுக்கிக்கொண்டு  49, பட்டங்கள் வென்றார். 

இவர் பெற்ற பரிசு தொகை எவ்வளவு தெரியுமா? தலை சுற்றி விழாதீர்கள். 20 மில்லியன் யூரோ. நம் ரூபாய் மதிப்பில் சுமார், 157 கோடிகள். 30 வருடங்களுக்கு முன் இது மிகப்பெரிய்ய்ய தொகை. இன்றைய மதிப்பை தெரிந்துகொள்ள, 32 ஆல் பெருக்கி கொள்ளவும். 

யார் அந்த பெருமைக்குரிய வீரர்? 1985- 1995 ஆண்டுகளில்,  மிக பிரபலமான நட்சத்திர வீரர்,  கண்டு பிடித்து விடீர்களா ? அவர் தான்  போரிஸ் பேக்கர்! 

காலங்கள் உருண்டோட, 30 ஆண்டுகள் கடந்தது. பணம் ,பெயர் ,புகழ் எல்லாம் , கிடைத்து . கூடவே கடனும் சேர்ந்தது . ஏன்?  திறமையை வளர்த்து , வெற்றிக் கோப்பையையும் அதன் மூலம் வருமானமும் ஈட்டத்  தெரிந்தவருக்கு சம்பாதித்த பணத்தை சரியாக கையாள தெரியவில்லையே? 

என்ன ஆனது? இரண்டு ஆண்டுகளுக்கு முன் , நீதிமன்றம் அவரை  திவால் ஆனதாக கூறியது . அவர் பொக்கிஷமாக வைத்துள்ள வெற்றிக் கோப்பைகளை, ஏலம் விட்டு அதன் மூலம் கடன் தொகையை ஈடுசெய்ய  நீதிமன்ற ஏற்பாடு செய்துள்ளது .

இந்த கடன், ஒரு நாளில் வந்தது அல்ல . இதுபோன்ற பேரிழப்பிற்கு,  மூன்று  முக்கிய காரணிகளை  சொல்லலாம். மிக ஆடம்பரமான வாழ்க்கைமுறை, தவறான முதலீடுகள்,  கடன் - (கடன் அட்டைகள் மூலம் வாங்கும் கடன் , வேறு சில கடன்கள் )

ஒரு புள்ளி விவரப்படி , கடந்த 7 ஆண்டுகளில், நம் நாட்டில், குடும்பம் சார்ந்த கடன், 11.3 %  உயந்துள்ளது. ( 2012 ஆண்டில்   8.7 % ஆக இருந்தது ). 2009 ஆண்டில்   மொத்த உள்நாட்டு உற்பத்தியில், சேமிப்பு  25 % ஆக  இருந்தது,   2018 ஆண்டில் 17 %  ஆக  குறைந்து விட்டது .

இந்த மாற்றத்திற்கு என்ன காரணங்கள்?  பொருளாதார நிபுணர்களின் கருத்துக்கள் என்ன?  தொடர்ந்து எங்களோடு பயணம் செய்யுங்கள். 

- சுப்ரமணியன் நடேசன் - 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close