ஓவியாவுடன் டேட்டிங்கில் மிரட்டும் ஆரவ்: வைரலாகும் வீடியோ

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 11 Jul, 2018 01:28 am

aarav-at-dating-with-oviya-video-of-vairal

வெளிநாட்டில் ஆரவுடன் டேட்டிங் சென்ற ஓவியாவின் வீடியோ வெளியாகி சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனது காதலை சொன்ன ஓவியாவும், அதனை மறுத்த ஆரவ்வும் பாங்காக் நகரில் கைகோர்த்தபடி சுற்றித்திரியும் புகைப்படங்கள் இணையத்தில் சில நாட்களாக  உலா வந்தன. பிக்பாஸ் நிகழ்ச்சியின்போதே ஆரவ்விடம் தனது காதலை தெரிவித்தார் ஓவியா. எனினும், ஆரவ் அவரது காதலை மறுக்கவே, விரக்தியான ஓவியா நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார். இறுதிவரை போட்டியாளராக இருந்த  ஆரவ் இறுதிவரை  பிக்பாஸ் நிகழ்ச்சியின் டைட்டிலை வென்றார்.

இதைத்தொடர்ந்து அவ்வப்போது ஓவியா - ஆரவ் சந்தித்துக்கொள்ளும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வந்தன. இந்நிலையில் தாய்லாந்தின் பாங்காக் நகரில் ஆரவ் மற்றும் ஓவியா கைகோர்த்தபடி செல்லும் புகைப்படங்கள் சில தினங்களுக்கு முன் வெளியாகி ஓவியா ஆர்ம்பியினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஆனால், அந்தப்புகைப்படத்தில் ஆரவ் மட்டுமே நன்றாக அடையாளம் காணப்பட்டார். அவருடன் சென்ற பெண் ஓவியா இல்லை எனவும் சிலர் மறுத்து வந்தனர்.

https://twitter.com/muthukumarsalem/status/1016250774769111040

இந்நிலையில் தாய்லாந்த்தில் இருவரும் ஒன்றாக உலா வருவது உண்மைதான் என்பதை நிரூபிக்கும் வகையில் ஒரு வீடியோ வெளிவந்துள்ளது. 3 நொடிகளே உள்ள அந்த வீடியோவில் ஆரவிற்கு பின்னால் ஓவியா மறைந்து கொள்கிறார். அந்த வீடியோவை ஒரு ரசிகர் எடுத்திருக்கிறார். வீடியோ எடுக்கக்கூடாது என அந்த ரசிகரை ஆரவ் கையை நீட்டி எச்சரிக்கிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. 

newstm.in

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.