சல்மான் கானுடன் நடிக்கும் பிரபாஸ்?

  நந்தினி   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
‘பாகுபலி’யின் வெற்றி, இந்திய சினிமாவில் பிரபாசுக்கு மிகப்பெரிய பெயரைப் பெற்றுத் தந்துள்ளது. இந்திய சினிமாவில் மட்டுமல்ல, உலக அளவிலும் கூட அவருக்கு ரசிகர்கள் உருவாகத் தொடங்கிவிட்டனர். அதனால்தான், ஹாலிவுட் படத்தில் பிரபாஸ் நடிக்கப் போகிறார் என்ற பேச்சுகள் அடிபடுகின்றன. ஹாலிவுட்டில் நடிக்கிறாரோ, இல்லையோ… பாலிவுட்டில் அவர் நடிப்பது உறுதியாகிவிட்டது. இயக்குநரும், தயாரிப்பாளருமான ரோகித் ஷெட்டியின் படத்தில் நடிக்கப் போகிறார் என்கிறார்கள். அந்தப் படத்தில், சல்மான் கானும் நடிக்கிறாராம். தற்போது, தன்னுடைய ‘ட்யூப்லைட்’ படத்தின் புரமோஷன் வேலைகளில் ஈடுபட்டுள்ளார் சல்மான் கான். அடுத்த வாரம் இந்தப் படம் ரிலீஸாகிறது. அது முடிந்ததும், பிரபாஸுடன் நடிக்க இருக்கிறார் என்கிறார்கள். ‘பாகுபலி’யின் வெற்றியைத் தாங்கிக்கொள்ள முடியாமல், அதைப்பற்றி ஒரு வார்த்தை கூடப் பேசாமல் தவிர்த்து வருகின்றனர் கான் நடிகர்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில், பிரபாஸுடன் இணைந்து நடிப்பாரா சல்மான் கான்?

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close