சென்னை திரும்பினார் ரஜினி!

Last Modified : 01 Jan, 1970 05:30 am
மும்பையில் காலா முதற்கட்ட படப்பிடிப்பில் நடித்து கொண்டு இருந்த ரஜினி, திடீர் உடல் நல குறைவு காரணமாக, ஜூன் 28ம் தேதி மும்பையில் இருந்து அமெரிக்கா சென்றார். பின்னர் அங்கு மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்கிறார் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ரஜினிகாந்த் அமெரிக்காவில் சூதாட்ட கிளப் ஒன்றில் இருக்கும் படம் வெளியாகி பல சர்ச்சைகளை கிளப்பியது. இதனைத் தொடர்ந்து ரஜினிகாந்தின் செல்பி வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்த வீடியோவில் காரை ஒருவர் ஓட்ட ரஜினிகாந்த் பேசிக் கொண்டே செல்வது போல் காட்சி இடம்பெற்றிருந்தன. இவ்வளவு பரபரப்புகளுக்கு பின்னர் ரஜினி சென்னை திரும்பியுள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close