• திகார் சிறையில் கைதிகள் மீது தாக்குதல் நடத்தியதாக தமிழக காவல்துறை மீது வழக்கு
  • படித்த பெண்களை விட கிராமத்து பெண்களிடம் தைரியம் அதிகம்: கமல்ஹாசன்
  • படித்த பெண்களை விட கிராமத்து பெண்களிடம் தைரியம் அதிகம்: கமல்ஹாசன்
  • சபரிமலை தீர்ப்புக்கு எதிராக மறு ஆய்வு மனு தாக்கல் கிடையாது: கேரள முதல்வர் மீண்டும் திட்டவட்டம்
  • பகத் சிங் பிறந்தநாளை கொண்டாடிய மாணவி சஸ்பெஸ்ட்!

அடுத்த ரவுண்டுக்கு ரெடியாகும் அஞ்சலி

Last Modified : 01 Jan, 1970 05:30 am

தரமணி படத்துக்குப் பிறகு அஞ்சலியைத் தேடி நிறைய வாய்ப்பு வந்துள்ளதால், அவர் அடுத்த ரவுண்டுக்கு ரெடியாகிறார். ஆந்திராவை சேர்ந்த அஞ்சலி, ராம் இயக்கத்தில் வந்த 'கற்றது தமிழ்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர். முதல் படத்திலேயே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய அஞ்சலி திரையுலகத்தின் கவனத்தை ஈர்த்தார். கற்றது தமிழ் படத்துக்குப் பிறகு பல படங்களில் நடித்திருந்தாலும், 'அங்காடித் தெரு' படம் தான் அஞ்சலியைப் பிரபலமாக்கியது. அங்காடிதெரு படவெற்றியால் முன்னணி நடிகையாக மாறினார். தமிழ் தவிர தெலுங்கு படங்களிலும் நடித்து வந்தார் அஞ்சலி. இந்நிலையில், சித்தி கொடுமை செய்வதாக சொல்லி பரபரப்பை ஏற்படுத்தி, சில மாதங்கள் தலைமறைவாகவும் இருந்தார். இதனால், அஞ்சலிக்கு பட வாய்ப்புகள் பறிபோனது. சிறு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். தரமணி படத்தில் தனது அடுத்த ரவுண்டை ஆரம்பித்த அஞ்சலி, தற்போது நடிகர் ஜெய் ஜோடியாக 'பலூன்' படத்திலும், ராம் இயக்கத்தில் 'பேரன்பு' படத்திலும் நடித்துவருகிறார். இது குறித்து அஞ்சலி கூறுகையில், "இயக்குநர் ராம் மூலம்தான் எனது சினிமா பயணம் தொடங்கியது. அதேபோல், எனது இரண்டாவது ரவுண்டையும் அவர் தான் தொடங்கி வைத்திருக்கிறார். ராம் இயக்கிய 'தரமணி' படத்தில் சில காட்சிகளில் மட்டும் வந்தாலும், சிறப்பான கதாப்பாத்திரத்தைக் கொடுத்தார். 'தரமணி படத்தில் நீங்கள் நடித்தால் வியாபார ரீதியில் நன்றாக இருக்கும்' என ராம் கேட்டுக் கொண்டதால் யோசிக்காமல் நடித்துக் கொடுத்தேன். இப்போது அவர் இயக்கும் பேரன்பு படத்தில் ஒரு அழுத்தமான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். இந்தப் படம் எனக்கு பெயர் வாங்கித் தரும். இதுதவிர, ராம் இயக்கும் அடுத்த படத்தில் லீட் ரோலில் நடிக்கிறேன் "என்றார் அஞ்சலி.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close