• திகார் சிறையில் கைதிகள் மீது தாக்குதல் நடத்தியதாக தமிழக காவல்துறை மீது வழக்கு
  • படித்த பெண்களை விட கிராமத்து பெண்களிடம் தைரியம் அதிகம்: கமல்ஹாசன்
  • படித்த பெண்களை விட கிராமத்து பெண்களிடம் தைரியம் அதிகம்: கமல்ஹாசன்
  • சபரிமலை தீர்ப்புக்கு எதிராக மறு ஆய்வு மனு தாக்கல் கிடையாது: கேரள முதல்வர் மீண்டும் திட்டவட்டம்
  • பகத் சிங் பிறந்தநாளை கொண்டாடிய மாணவி சஸ்பெஸ்ட்!

மீண்டும் மிரட்ட வரும் காஞ்சனா

Last Modified : 23 Aug, 2017 01:01 pm

கோலிவுட்டில் பேய் பட சீசன் ஓய்ந்து போன நிலையில், காஞ்சனாவின் மூன்றாம் பாகத்தை எடுத்து மீண்டும் மிரட்ட வருகிறார் லாரன்ஸ். முனி படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் பேய் பட சீசனை தொடங்கி வைத்தார் ராகவா லாரன்ஸ். அந்தப் படத்தின் அதிரடியான வெற்றியால் முனி படத்தின் அடுத்தடுத்த பாகங்களாக அவர் எடுத்த காஞ்சனா, காஞ்சனா 2 படங்களும் வெற்றி பெற்றன. இந்நிலையில், ரஜினியின் மூன்று முகம் அல்லது மன்னன் பட ரீமேக்கில் பி.வாசு இயக்கத்தில் நடிக்க போவதாக சொல்லப்பட்டது. ஆனால், தற்போது அவர், அந்த முடிவை மாற்றிக் கொண்டுள்ளார். கோலிவுட்டில் பேய் பட சீசன் ஓய்ந்து போன நிலையில், காஞ்சனாவின் மூன்றாம் பாகத்தை எடுத்து மீண்டும் பேய் பட சீசனை தொடங்கி மிரட்டலாம் என தீர்மானித்திருக்கிறார் லாரன்ஸ். காஞ்சனா-3 படத்தை தயாரித்து அதில் ஹீரோவாக நடிக்கும் லாரன்ஸ் இந்த படத்தை இயக்கவில்லை. பாகுபலி புகழ் இயக்குநர் ராஜமவுலி மற்றும் கதாசிரியர் விஜயேந்திர பிரசாத்தின் உதவியாளர் காஞ்சனா-3 படத்தை இயக்குகிறார் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்தப்படம் குறித்த அறிவிப்புகள் வெளியான நிலையில் படத்தின் ஒளிபரப்பு உரிமையை பிரபல தனியார் தொலைக்காட்சி வாங்கியுள்ளது. தெலுங்கு உரிமையும் விற்கப்பட்டுவிட்டது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close