• வாஜ்பாய் உடலுக்கு சோனியா, ராகுல், மன்மோகன் சிங், பிரனாப் அஞ்சலி!
  • முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைந்தார்!
  • அமராவதியில் இருந்து வினாடிக்கு 35,000 கனஅடி நீர் வெளியேற்றம்
  • 5 மாவட்டங்களில் கனமழை - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • கூட்டத்தில் சிக்கிய ராகுல் : மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்

ஃபோர்ப்ஸின் 2017 பட்டியலின் டாப் 10ல் இடம் பெற்ற மூன்று இந்திய நடிகர்கள்

  நந்தினி   | Last Modified : 23 Aug, 2017 03:15 pm

உலகிலேயே அதிக சம்பளம் பெறும் நடிகர்-நடிகைகளின் பட்டியலை அமெரிக்காவின் பிரபல ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை இன்று வெளியிட்டுள்ளது. இந்த லிஸ்டின் டாப் 10 இடங்களில் இந்திய நடிகர்கள் ஷாருக்கான், சல்மான் கான், அக்ஷய் குமார் ஆகியோர் இடம் பெற்றுள்ளன. பாலிவுட் கிங் கான் என்று கொண்டாடப்படும் ஷாருக், பட்டியலில் 8-வது இடத்தை பிடித்துள்ளார். ஷாருக்கான் 38 மில்லியன் டாலர் (ரூ.243.50 கோடி) சம்பளம் பெறுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த வருடம் வெளியான ஷாருக்கானின் டியர் ஜின்தகி படத்தை விட, இந்த ஆண்டின் ரயீஸ் படம் நல்ல வசூல் வேட்டையை செய்தது. இவரை தொடர்ந்து ஒன்பது மற்றும் பத்தாவது இடங்களில் சல்மான் கான் மற்றும் அக்ஷய் குமார் ஆகியோர் உள்ளனர். சல்மான் 37 மில்லியன் டாலர் (ரூ.237 கோடி), அக்ஷய் 35.5 மில்லியன் டாலர் (ரூ.227.5 கோடி) சம்பளம் பெற்று வருகிறார்கள். சல்மானின் ப்ளாக்பஸ்டர் ஹிட்டாக கடந்த வருடம் 'சுல்தான்' அமைந்தது. இவ்வருடம் 'டியூப்லைட்' படமும் கலெக்ஷனில் பின்னியிருந்தது. 2016 ரிலீசாகி சூப்பர் ஹிட் அடித்த 'ரஸ்டம்' மற்றும் 'ஏர்லிப்ட்' படங்களுக்காக தேசிய விருது பெற்றவர் அக்ஷய் குமார். இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நடிகர் ஆமிர் கான், பட்டியலில் இடம் பெறாதது ஏமாற்றம் அளித்துள்ளது. கடந்த ஆண்டு இறுதியில் வெளியான ஆமிர் கானின் 'தங்கல்' திரைப்படம் இந்தியாவில் மட்டுமில்லாமல் உலக நாடுகளிலும் வசூல் மழை பொழிந்தது. ஒட்டுமொத்தமாக ரூ.2000 கோடி வசூல் செய்து, சாதனை படைத்தது 'தங்கல்'. ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரு வருடத்திற்கான நடிகர்களின் சம்பள பட்டியலை மட்டுமே வெளியிட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அதன்படி, கடந்த 2016 ஜூன் 1ம் தேதியிலிருந்து பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. 'தங்கல்' படம் டிசம்பர் 23, 2016ல் தான் வெளியானது. இருந்தபோதிலும், பட்டியலில் இடம் பெறவில்லை. மேலும், பட்டியலின் முதலிடத்தை அமெரிக்க நடிகர் மார்க் வாஹல்பெர்க் (68 மில்லியன் டாலர்) பிடித்துள்ளார். கடந்த ஆண்டு முதலிடத்தை பிடித்திருந்த டிவைன் 'தி ராக்' ஜான்சன் (65 மில்லியன் டாலர்) 2-வது இடத்தை பெற்றுள்ளார். வின் டீசல் (54.5 மில்லியன் டாலர்) 3-வது, ஆடம் சாண்ட்லர் (50.5 மில்லியன் டாலர்) 4-வது, ஜாக்கி சான் (49 மில்லியன் டாலர்) 5-வது, ஐயர்ன் மேன் ராபர்ட் டௌனே ஜூனியர் (48 மில்லியன் டாலர்) 6-வது, டாம் க்ரூஸ் (43 மில்லியன் டாலர்) 7-வது இடங்களிலும் உள்ளனர். 'லா லா லேண்ட்' பட புகழ் நடிகை எம்மா ஸ்டோன் (26 மில்லியன் டாலர்), இப்பட்டியலில் 15-வது இடத்தை பிடித்துள்ளார். நடிகைகளிலேயே இவர் தான் டாப் இடத்தை பிடித்து இருக்கிறார். 'ஹாரி பாட்டர்' புகழ் எம்மா வாட்சன் (14 மில்லியன் டாலர்) 25-வது இடத்தை பெற்றுள்ளார். நடிகைகளில் இவர் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளார். கடந்த ஆண்டு ஃபோர்ப்ஸ் பட்டியலில் 10-வது இடத்தை பிடித்திருந்த இந்திய நடிகை தீபிகா படுகோன், இந்தாண்டு பட்டியலில் இடம்பெற தவறிவிட்டார்.

Advertisement:
[X] Close