சிம்புவுக்கு ஏறுமுகம்!

  பால பாரதி   | Last Modified : 06 Jun, 2018 05:46 am

str-next-4-films-after-chekka-chivantha-vaanam

’செக்க சிவந்த வானம்’ படத்தில் நடித்து வரும் சிம்புவுக்கு புதிதாக நான்கு படங்கள் ஒப்பந்தமாகியிருக்கிறது. இதனால், சிம்பு ரசிகர்கள் உற்சாகத்தில் மிதக்கின்றனர். 

சினிமாவில் விட்ட இடத்தைப் பிடிக்கும் தீவிரத்தில் இருக்கிறார் சிம்பு. மணிரத்னத்தின்`செக்கச் சிவந்த வானம்' படத்தில் நடிக்க ஒப்பந்தமான பிறகு சிம்புவுக்கு ஏறுமுகம் தான்!
`90 எம்.எல்' படத்துக்கு இசையமைக்கும் சிம்பு,`பெரியார் குத்து' என்ற ஆல்பத்தை உருவாக்கி, பாடி நடனமாடவும் திட்டமிட்டுள்ளார். இந்நிலையில், சிம்புவைத் தேடி நான்கு படங்கள் வந்திருக்கிறது.

அஜித்தின் `வீரம்', விஜய்யின் `பைரவா' போன்ற படங்களைத் தயாரித்த விஜயா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் ஹீரோவாக நடித்து, அந்தப் படத்தை அவரே இயக்குகிறார். அடுத்து,`விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தின் சீக்வெலாக உருவாகவிருக்கும் `விண்ணைத்தாண்டி வருவேன்' என்ற படத்தில் நடிக்கவிருக்கிறார். இதையடுத்து, கலைப்புலி எஸ். தாணுவின் வி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் படத்தில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இது தவிர மேலும் ஒரு படத்தில் நடிப்பதற்கான பேச்சு வார்த்தையும் நடக்கிறது! ஒரே நேரத்தில் நான்கு படங்களில் ஒப்பந்தமாகியிருக்கும் தகவலை அறிந்து, சிம்பு ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close