இணையத்தைக் கலக்கும் 'விஸ்வரூபம் 2' மேக்கிங்!

  பால பாரதி   | Last Modified : 11 Jun, 2018 12:15 pm

kamal-s-vishwaroopam-2-fight-scene-making-video

கமல்ஹாசனின் ’விஸ்வரூபம் 2’ படத்தில் இடம் பெறும் சண்டைக் காட்சி மேக்கிங் இணையத்தைக் கலக்கிக் கொண்டிருக்கிறது.  

கமல்ஹாசன், ’விஸ்வரூபம்’ படத்தின் இரண்டாம் பாகமாக ’விஸ்வரூபம் 2’படத்தை எடுக்கத் துவங்கி பிறகு, அந்த முயற்சியை கொஞ்சம் ஒத்தி வைத்து விட்டு , ’தசாவதாரம்' படத்தில் வந்த பல்ராம் நாயுடு கதாப்பாத்திரத்தை வைத்து 'சபாஷ் நாயுடு' என்கிற படத்தை ஆரம்பித்தார். வெளிநாட்டில் நடந்த ’சபாஷ் நாயுடு’ படப்பிடிப்பில் கமல்ஹாசனுக்கு காலில் அடிபடவே, அந்த பட வேலையும் கிடப்பில் போடப்பட்டது.

இதற்கிடையே,’பிக்பாஸ்’ நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவதில் பிஸியாக இருந்தார் கமல். ’பிக் பாஸ்’ நிகழ்ச்சி முடியும் தருவாயில், இயக்குநர் ஷங்கருடன் இணைந்து 'இந்தியன் 2’ படத்தின் அறிவிப்பை வெளியிட்டார். இந்நிலையில், அதிரடியாக அரசியல் களத்தில் குதித்து பரபரப்பை ஏற்படுத்திய கமல், தற்போது மீண்டும் ’பிக் பாஸ் 2’ நிகழ்ச்சிக்கு தொகுப்பாளர் பணிக்குத் திரும்பியுள்ளார். 

’பிக்பாஸ்’ நிகழ்ச்சி தொடங்க இருக்கும் வேளையில், 'விஸ்வரூபம் 2' படத்தை ரிலீஸ் செய்யவும் திட்டமிட்டிருக்கிறார். அதன் முதல் கட்டமாக படத்தின்  ட்ரெயிலரை இன்று வெளியிடுகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் தயராகியிருக்கும் ’விஸ்வரூபம் 2’ படத்தின் ட்ரெயிலரை தமிழில் ஸ்ருதி ஹாசன், தெலுங்கில் ஜுனியர் என்டிஆர், இந்தியில் அமீர்கான் ஆகியோர் இன்று மாலை 5 மணிக்கு வெளியிடுகின்றனர். 

இந்நிலையில் 'விஸ்வரூபம் 2' படத்தின் சண்டைக்காட்சிகள் படமாக்கப்படும்போது எடுத்த மேக்கிங் வீடியோ ஒன்று 2014-ம் ஆண்டு வெளியிடப்பட்டது. அது தற்போது மீண்டும் வைரலாகி வருகிறது.  'விஸ்வரூபம் 2' படத்தின் ஸ்டன்ட் காட்சிகள் உருவான விதம் ரசிகர்களுக்குப் பெரும் எதிர்பார்ப்பைத் துண்டும் வகையில் உள்ளது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close