விஜய் பிறந்த நாளுக்கு தளபதி 62 அறிவிப்பு இல்லையா? ரசிகர்கள் கேள்வி

  திஷா   | Last Modified : 11 Jun, 2018 04:17 pm

vijay-is-not-in-the-celebration-mood-fans-shocked

தன்னுடைய பிறந்த நாளை ரசிகர்கள் கொண்டாட வேண்டாம். கட்டாயம் கொண்டாடியே ஆவேன் என்று விரும்பு ரசிகர்கள் மிகவும் எளிமையாக ஏழைகளுக்கு உதவி புரிவதன் மூலம் கொண்டாடலாம் என்று நடிகர் விஜய் கூறியிருப்பது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோலிவுட்டில் தனக்கென அதிக ரசிகர்களைக் கொண்டவர் விஜய். இளம் நடிகர்கள் பலரும் இவருடைய ஸ்டைல், நடிப்பு, டான்ஸ் என பலவற்றிற்கு ரசிகர்கள். இவர் ஜூன் 22, 1974-ம் ஆண்டு எழும்பூர் மருத்துவமனையில் பிறந்தவர். இதனால் வருடா வருடம் தனது பிறந்த நாளின் போது அந்த மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு மோதிரம் அணிவிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். அவரின் ரசிகர்களும் நலத்திட்ட உதவிகள், ரத்த தானம் என பலவற்றை செய்து விஜய்யின் பிறந்தநாளை சிறப்பிப்பார்கள். 

இந்நிலையில் வரும் 22-ம் தேதி விஜய்யின் பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாட ரசிகர்கள் தயாராகி விட்டனர். இந்த நேரத்தில் விஜய்யின் தலைமை ரசிகர் மன்றத்தில் இருந்து கிளை மன்றங்களுக்கு ஒரு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதில் இந்த வருடம் ஆடம்பர கொண்டாட்டங்கள் எதுவும் வேண்டாம். அமைதியான வழியில் கொண்டாடுங்கள். ஏழை மக்களுக்கு உதவிகளை செய்யுங்கள். அதையும் கூட விளம்பரப்படுத்தக் கூடாது எனக் குறிப்பிடப் பட்டிருக்கிறதாம். 

தொடரும் நீட் தற்கொலைகள், தூத்துக்குடி சம்பவத்தில் 13 பேர் பலியாகியது, காவிரி பிரச்னை என தமிழகத்தின் முக்கியப் பிரச்னைகள் தீர்வு காணாமல் இருக்கும் இந்த நேரத்தில் பிறந்தநாளை கொண்டாடுவது சரியாக இருக்காது என்பது விஜய்யின் எண்ணமாம். அதனால் கொண்டாட்டம் வேண்டாம் என்று உத்தரவு வந்துள்ளதாம். அப்படி என்றால் தளபதி 62 படம் தொடர்பான அறிவிப்பும் பிறந்த நாளன்று இருக்காதா என்று கேட்கின்றனர் ரசிகர்கள்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close