நயன்தாராவின் ஹாரர் படம்! 

  Bala   | Last Modified : 13 Jun, 2018 12:27 pm

nayanthara-s-horror-film-shoot-started

முழுக்க முழுக்க ஹாரர் பின்னணி உள்ள ஒரு படத்தில் நடிக்கிறார் நயன்தாரா.

அஜித், விஜய் போன்ற ஹீரோக்களோடு ஒரு பக்கம் டூயட் பாடினாலும், இன்னொரு பக்கம் ’அறம்’ மாதிரியான ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள  படங்களிலும் நடித்து தனது இமேஜை தக்க வைத்துக் கொள்வதில் கவனமாக இருக்கிறார் நயன்தாரா.

அவர் ஏற்கனவே நடித்த ’மாயா’ திரைப்படம் மாதிரி, முழுக்க முழுக்க ஹாரர் பின்னணி உள்ள ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இந்தப் படத்தை ’அறம்’ படத்தைத் தயாரித்த, கே.ஜே.ஆர் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கிறது. ’லட்சுமி’, ’மா’ போன்ற குறும்படங்களை இயக்கிய சர்ஜூன் என்பவர் இயக்குகிறார். 

இந்தப் படத்துக்கு இன்னும் டைட்டில் முடிவாகாததால் ‘நயன் 63’ என்கிற பெயரிலேயே படத்தை தொடங்கியுள்ளனர். இதன் படப்பிடிப்பு நேற்று தொடங்கியது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close