அஜித் பொழுதுபோக்காக செய்யும் வேலை என்ன தெரியுமா?

  Newstm Desk   | Last Modified : 14 Jun, 2018 04:44 pm

ajith-training-at-gun-shooting

’தல’ அஜித்,பொழுதுபோக்காக செய்யும் வேலை என்னவென்று தெரிந்தால், உங்களுக்கு தலையே சுற்றும்?

’தல’ அஜித், சினிமாவைத் தாண்டி பல துறைகளிலும் திறமைசாலியாக இருக்கிறார். கார் மற்றும் பைக் ரேஸ் சாம்பியன், சமையல் கலை நிபுணர், ஹெலிகாப்டர் ரைடர் என பல துறைகளிலும் சகலகலா வல்லவனாக இருக்கிறார்.  

படப்பிடிப்பு இல்லாத சமயங்களில் பொழுதுபோக்கிலும் அதிகமாக கவனம் செலுத்திவது அஜித்துக்கு மிகவும் பிடிக்கும்! பைக், கார், ஜெட் மற்றும் ஹெலிகாப்டர் என்று ஒவ்வொரு காலகட்டத்திலும் தனது பொழுதுபோக்கை மாற்றிக் கொண்டு வந்த அஜித், தற்போது புதிய பொழுதுபோக்கு ஒன்றில் கவனம் செலுத்தி வருகிறார். அஜித், துப்பாக்கி சுடுதலில் ஈடுபட்டு வருகிறார். அவரது புதிய பொழுதுபோக்கு தான் இந்த துப்பாக்கி சுடுதல்! படப்பிடிப்பு இருந்தாலும், இல்லை என்றாலும் தினமும் மாலை நேரத்தில் துப்பாக்கி சுடுவதில் பிஸியாகிவிடுகிறாராம். 

இயக்குநர் சிவாவுடன் நான்காவது முறையாக இணைந்திருக்கும் அஜித், ‘விஸ்வாசம்’ படத்தின் முதல் கட்டப் பிடிப்பை முடித்துவிட்டு தற்போது ஓய்வில் இருக்கிறார். இந்த ஓய்வு நேரத்தை ’துப்பாக்கி சுடும்’ பயிற்சியில் தீவிரமாக இறங்கியிருக்கிறார் அஜித்! ’தல’ அஜித், பொழுதுபோக்காக செய்யும் வேலையை நினைக்கும் போது நமக்கு தலை சுத்துதே!

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close