’பிக் பாஸ்2’ ஐஸ்வர்யா நடித்த எம்.பி.எம்.இ ட்ரெய்லரை வெளியிட்ட அதர்வா!

  பால பாரதி   | Last Modified : 28 Jun, 2018 04:52 pm

atharvaa-trailer-launch-from-mpme

’பிக் பாஸ் 2’ நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றுள்ள நடிகை ஐஸ்வர்யா தத்தா நடித்திருக்கும் ’மறைந்திருந்து பார்க்கும் மர்ம்மமென்ன’ படத்தின் ட்ரெய்லரை நடிகர் அதர்வா, இன்று வெளியிட்டார்.

’தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ பட நாயகி ஐஸ்வர்யா தத்தா, இப்போது ’பிக் பாஸ் 2’ நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமாகியிருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு முன்பு அவர், ’மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன’ என்கிற படத்தில் நடித்திருந்தார்.  

எக்ஸட்ரா என்டர்டெயின்மென்ட் வி.மதியழகன், ஆர்.ரம்யா, பி.ஜி.மீடியா ஒர்க்ஸ் பி.ஜி.முத்தையா தயாரித்திருக்கும் இந்தப் படத்தில், ‘திலகர்’ பட நாயகன் துருவா ஹீரோவாக நடித்திருக்கிறார். மேலும் அஞ்சனா, சக்ரவர்த்தி, சரண்யா, ராதாரவி, நாகிநீடு, மனோபாலா, அருள்தாஸ், மைம் கோபி, வளவன், ராம் ஆகியோரும் நடித்திருக்கின்றனர். 

இந்தப் படத்துக்கு பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்ய, அச்சு இசையமைக்க, அறிமுக இயக்குநர் ராகேஷ் இயக்கியிருக்கிறார். இன்றைய சமூகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் சந்திக்கும் அச்சுறுத்தலையும், பிரச்னைகளையும் சொல்லி, அதற்கான தீர்வுகளை விளக்குகிறது படம். இந்தப் படத்தின் ட்ரெய்லரை இன்று நடிகர் அதர்வா வெளியிட்டார்.  

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close