’கடைக்குட்டி சிங்கம்’ படத்தில் அறிமுகமாகும் சூப்பர் சிங்கர்ஸ்!

  Bala   | Last Modified : 08 Jul, 2018 02:14 am

super-singer-tanushri-and-tej-in-kadaikutty-singam

கார்த்தியின் 'கடைக்குட்டி சிங்கம்' படத்தில், சூப்பர் சிங்கர்ஸ் புகழ் தனுஸ்ரீ - தேஜ் இருவரும் குழந்தை நட்சத்திரங்களாக அறிமுகமாகின்றனர். 

நடிகர் சூர்யாவின்  தயாரிப்பில், பாண்டிராஜ் இயக்கத்தில், கார்த்தி - சாயிஷா சைகல் ஜோடியாக நடித்திருக்கும் ‘கடைக்குட்டி சிங்கம்’ படம், விரைவில் திரைக்கு வர இருக்கிறது. விவசாயத்தின் அருமையை உணர்த்தும் இந்தப் படத்தில் நாயகன் கார்த்தி, கெத்தான விவசாயியாக நடித்திருக்கிறார். அவரின் தந்தையாக குணச்சித்திர வேடம் ஏற்றுள்ளார் சத்யராஜ். இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைத்திருக்கிறார். 

இந்தப் படத்தில் சூப்பர் சிங்கர்ஸ் நிகழ்ச்சியின் மூலமாக பாப்புலராகியிருக்கும்  தனுஸ்ரீ - தேஜ் இருவரும் குழந்தை நட்சத்திரங்களாக அறிமுகமாகின்றனர். ’கடைக்குட்டி சிங்கம்’ படப்பிடிப்பின் போது, நாயகன் கார்த்தி, நாயகி சாயிஷா, ஆகியோர் தனுஸ்ரீ - தேஜ் இருவரிடத்திலும் அன்பாக பழகியுள்ளனர். ’முதலில் படிப்பு பிறகு தான் நடிப்பு’ என அட்வைஸ் செய்திருக்கிறார் சத்யராஜ். 

இந்தப் படம் வெளிவந்த பிறகு இந்த குழந்தை நட்சத்திரங்களுக்கு பட வாய்ப்புகள் குவியும் என எதிர்பார்க்கப்படுகிறது! அந்தளவுக்கு இருவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்களாம்! இந்த சூப்பர் சிங்கர்ஸை தனது இசையமைப்பில் பாட வைக்கப்போவதாக உத்திரவாதம் கொடுத்திருக்கிறாராம் டி.இமான்!    
 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close