பல லட்சம் பார்வையாளர்களைக் கடந்த மம்மூட்டியின் டீசர்!

  திஷா   | Last Modified : 11 Jul, 2018 01:38 am

yatra-teaser-crossed-1m-views

தற்போது கோலிவுட், பாலிவுட், டோலிவுட் என எல்லாவற்றிலும் வாழ்க்கை வரலாற்றுப் படங்களை இயக்க ஆர்வம் அதிகரித்துள்ளது. சமீபத்தில் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு படமாக்கப் பட்டிருந்தது. தெலுங்கில் 'மகாநடி' எனவும் தமிழில் 'நடிகையர் திலகம்' எனவும் உருவாகியிருந்த அந்தப் படம் சாவித்ரியாக நடித்திருந்த கீர்த்தி சுரேஷுக்கு பேரும் புகழும் பெற்றுத் தந்தது. 

இந்நிலையில் தெலுங்கு சினிமாவில் மறைந்த ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாகுகிறது. ‘யாத்ரா’ எனப் பெயரிடப் பட்டுள்ள இதில் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியாக மலையாள முன்னணி நடிகர் மம்மூட்டி நடிக்கிறார். இதனை இயக்குநர் மகி.வி.ராகவ் என்பவர் இயக்குகிறார்.

யாத்ரா படத்தை ‘70mm எண்டர்டெயின்மெண்ட்ஸ்’ நிறுவனம் மிக பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. கே இசையமைத்து வரும் இதற்கு சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்கிறார், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.


 
ஏற்கனவே படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன் இதன் டீசரும் வெளியிடப் பட்டது. ரசிகர்களிடம் அதிக வரவேற்பைப் பெற்ற இந்த டீசர் தற்போது 12 லட்சம் பார்வையாளர்களைக் கடந்திருக்கிறது. 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close