வாலாட்டும் பீட்டா... நெருக்கடியில் கார்த்தி! - தப்பிக்குமா கடைகுட்டி சிங்கம்?

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 10 Jul, 2018 05:20 pm

only-for-jallikattu-back-to-betta

கார்த்தி நடிப்பில் வெளியாக உள்ள கடைகுட்டி சிங்கம் படத்தில் விலங்குகளை பயன்படுத்தி இருப்பதற்கு பீட்டா அமைப்பு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. இதனால், படக் குழுவினர் அதிர்ச்சியடைந்து உள்ளனர்.

பிராணிகள் நலனுக்காக என்று உலகம் முழுவதும் இயங்கி வருகிறது பீட்டா என்ற அமைப்பு. தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த மிகப்பெரிய தடையாக இந்த அமைப்பு இருந்தது. மாணவர்கள், பொது மக்கள் மெரினாவில் போராட்டத்தை தொடங்கி, அது விஸ்வரூபம் எடுக்கவே வேறு வழியின்றி ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதித்தது மத்திய அரசு. மீண்டும் மீண்டும் பீட்டா பிரச்னையை கிளப்பவே, உச்சநீதிமன்றம் வரை சென்று அதன் தமிரை அடக்கியது வரலாற்று நிகழ்வாகவே அமைந்து விட்டது. இந்நிலையில், தற்போது பீட்டாவின் குறி தமிழக சினிமாதுறை மீது பாய்ந்து வருகிறது. 

“படத்தில் ஒரு எறும்பு குறுக்கே போனால் கூட அது நலமாக இருக்கிறதா? அப்படியானால் மருத்துவரிடம் சான்றிதழ் பெற்று வாருங்கள்” என்று குடைச்சல் கொடுத்து வருகிறது பீட்டா. இதனால், குமுறிக்கொண்டிருக்கின்றனர் தமிழ் சினிமா துறையினர். இந்த நேரத்தில், ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்திற்கும் அப்படியொரு பிரச்னையை ஏற்படுத்தி இருக்கிறது பீட்டா. 

படத்தில் ஒரு ரேக்ளா ரேஸ் காட்சி இடம்பெற்றுள்ளது. பட ட்ரெய்லரை பார்த்து அதனைக் கண்டுபிடித்த பீட்டா, ஜல்லிக்கட்டுக்கு மட்டும்தான் உச்சநீதிமன்றம் அனுமதி கொடுத்திருக்கிறது.  ரேக்ளா ரேசுக்கெல்லாம் அனுமதி கொடுக்கவில்லை. அப்படி இருக்கையில், ஏன் படத்தில் ரேக்ளா போட்டி காட்சியை வைத்தீர்கள் என குறுக்கே வந்து நிற்கிறது. இதனால், கொதித்துப் போயிருக்கிறார்கள் படக்குழுவினர்.  படம் இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாக உள்ள நிலையில், முறையாக வாதாடி படத்தை சிக்கல் இல்லாமல் ரிலீஸ் பண்ணத் தயாராகிவருகின்றனர்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close