நடிகர் சங்கத்தில் ஜனநாயகமே இல்லை: பிரபல நடிகை குற்றச்சாட்டு

  Newstm Desk   | Last Modified : 11 Jul, 2018 11:28 am

no-democracy-in-amma-says-actress-padma-priya

கேரள நடிகர் சங்கம் தொடர்ந்து சிக்கலில் சிக்கி வரும் நிலையில் சங்கத்தில் ஜனநாயகமே இல்லை என பிரபல நடிகை பத்மபிரியா குற்றம் சாட்டியுள்ளார். 

பிரபல நடிகை கடத்தப்பட்டு பாலியல் ரீதியாக தாக்கப்பட்ட சம்பவத்தில் நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார். மேலும் அவரை சங்கத்தில் இருந்து அப்போதைய நிர்வாகிகள் நீக்கினர். 

இதனையடுத்து நடிகர் மோகன்லால் நடிகர் சங்க தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அதன் பின் நடிகர் திலீப் மீண்டும் சங்கத்தில் இணைக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பலர் கருத்து தெரிவித்து இருந்தனர். மேலும் சில நடிகைகளும் சங்கத்தில் இருந்து விலகினர். 

எதிர்ப்பை தொடர்ந்து திலீப்பை மீண்டும் சங்கத்தில் சேர்க்கும் முடிவில் இருந்து பின்வாங்கியது நடிகர் சங்கம். இந்நிலையில் இதுகுறித்து பிரபல நடிகை பத்மபிரியா கூறுகையில், கேரள நடிகர் சங்கத்தில் ஜனநாயகம் இல்லை. யார் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பதை முன்பே தீர்மானித்து வைத்துவிட்டனர். கடந்த தேர்தலில் நடிகை பார்வதி போட்டியிடுவதாக இருந்தார். ஆனால் அவரை சிலர் எச்சரித்தனர். இதனால் அவர் பின்வாங்கினார்" என்றார். 

Newstm.in

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close