‘சீமராஜா’ ரிலீஸ் தேதியை உறுதி செய்த பொன்ராம்!

  Newstm Desk   | Last Modified : 12 Jul, 2018 08:43 pm

seema-raja-release-date-announced

சிவகார்த்திகேயன்- சமந்தா நடித்திருக்கும் ’சீமராஜா’ படத்தின் ரிலீஸ் தேதியை உறுதி செய்திருக்கிறார் இயக்குநர் பொன்ராம்!

’வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ’ரஜினி முருகன்’ படங்களின் வெற்றிக்குப் பிறகு நாயகன் சிவகார்த்திகேயனும், இயக்குநர் பொன்ராமும் மூன்றாவது முறையாக இணைந்துள்ள ‘சீமராஜா’ படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக சமந்தா நடித்திருக்கிறார். இதில் கீர்த்தி சுரேஷ், இலவச இணைப்பாக இணைந்திருக்கிறார். மேலும் சிம்ரன், நெப்போலியன், சூரி, யோகி பாபு, மனோபாலா, சதீஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

கிராமத்துப் பின்னணியில் உருவாகியிருக்கும் இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைக்கிறார், 24 ஏ.எம்.ஸ்டூடியோஸ் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது.  

இந்தப் படத்தின் ஷூட்டிங் முடிந்து, தற்[போது ’டப்பிங்’ பணிகளும் நிறைவடைந்திருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கும் இயக்குநர் பொன்ராம், படத்தை வரும் செப்டம்பர் 13ம் தேதி வெளியிட இருப்பதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close