• கோவா முதல்வராக மனோகர் பாரிக்கர் தொடர்வார்: பா.ஜ தலைவர் அமித் ஷா
  • எம்.எல்.ஏ கொலையை தொடர்ந்து காவல் நிலையத்திற்கு தீ வைத்தனர் ஆதரவாளர்கள்
  • கேரள கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமைக்கு எதிராக போராடிய கன்னியாஸ்திரி பணி நீக்கம்
  • வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னை சந்திக்க அதிபர் ட்ரம்ப் தயார்: வெளியுறவுத்துறை செயலாளர்
  • நாகப்பட்டினம் அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது பெண் குழந்தை பத்திரமாக மீட்பு

நாசர் மகனுக்கு கமல் மகள் ஜோடி!

  Newstm Desk   | Last Modified : 12 Jul, 2018 08:45 pm

kamal-s-daughter-to-nasser-s-son

கமல்ஹாசனின் இளைய மகள் அக்‌ஷரா, நாசரின் இரண்டாவது மகனுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கிறார்.

கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் பட நிறுவனத்தில் உதவி இயக்குநராக பல ஆண்டிகள் பணியாற்றிய ராஜேஷ் எம்.செல்வா, ‘தூங்கா வனம்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். சினிமா ரசிகர்களிடையேயும், விமர்சகர்களிடையேயும் கலவையான விமர்சனத்தைப் பெற்றது அந்தப் படம். இதையடுத்து கமல்ஹாசனின் ’விஸ்வரூபம் 2’ பட வேலைகளில் பிஸியாக இருந்த ராஜேஷ்.எம்.செல்வா இப்போது, அடுத்த படத்தை இயக்கத் தயாராகிவிட்டார். இன்னும் டைட்டில் முடிவாகாத இப்படத்தை ‘ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ்’ நிறுவனத்துடன் இணைந்து, தனது ‘ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல்’ மூலம் தயாரிக்கிறார் கமல்ஹாசன். ஜிப்ரான் இசையமைக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் ஆகஸ்ட் 17ல் தொடங்குகிறது!

இதில் விக்ரம் ஹீரோவாக நடிக்கிறார். ஆனால், இதில் அவருக்கு ஜோடி இல்லை! கமல்ஹாசனின் இளைய மகள் அக்‌ஷரா ஹாசனும்,‘8 தோட்டாக்கள்’ புகழ் மீரா மிதுனும் நாயகிகளாக நடிக்கின்றனர். அக்‌ஷரா ஹாசனுக்கு ஜோடியாக நடிக்க, நடிகர் நாசரின் இரண்டாவது மகன் அபி மெஹ்தி ஒப்பந்தமாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

newstm.in
 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close