‘மெரீனா புரட்சி’ - ‘பீட்டா’வுக்கு செக் வைக்கும் பாண்டிராஜ்

  இரமேஷ்   | Last Modified : 26 Jul, 2018 07:28 pm

director-pandiaraj-s-awesome-reply-to-beta

‘ஆடு, மாடு, குரங்கு, குதிரை, யானையையெல்லாம் குழந்தைகளாக பாவிச்சு படமெடுத்த காலமெல்லாம் தேவர் பிலிம்ஸோட போச்சு. ‘இம்சை அரசன்’ல இயக்குநர் ஷங்கர் பட்ட கஷ்டமெல்லாம் அவ்வளவு லேசுல இண்டஸ்ட்ரீ மறக்காது. முக்கால்வாசி கிராபிக்ஸ்னாலும், ‘கும்கி’ல யானையைவிட இந்த பீட்டாவும், சென்சாரும் பண்ண அலம்பல் சொல்லி மாளாது. அப்படி நொந்து போன அனுபவத்தைத் தான் தன் ஆதங்கமா சமீபத்தில் பேசியிருந்தார் ‘பசங்க’ பாண்டிராஜ்.

‘பீட்டா’ன்னு சொல்லும் போதே அந்த சின்ன உருவம், விஜயகாந்த் கணக்கில் கண்களில் சிவப்பைக் கொண்டு வந்து நறநறவென்று அனல் பார்வையை துப்புவார் போல. ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தின் சக்சஸ் மீட்டில் அவர் பட்ட கோபம், அவுன்ஸ் கணக்கல்ல. டன் கணக்கு! 

‘‘பள்ளத்துல விழுந்த ஆட்டுக்குட்டிய தூக்குறேன்னு என் சொந்தக்கார பொண்ணு ஒண்ணு செத்து ஒரு வாரம்தான் ஆச்சு. காலையில் தூக்கலாம்னு சொன்னப்பவும், அது அழறதை பார்த்துக்கிட்டு இருக்க முடியாதுன்னு தன் உயிரை விட்டுட்டா. எங்களுக்காடா வந்து விலங்குகள் பற்றி பாடம் எடுக்குறீங்க?’’ என்று பாண்டிராஜ் கேட்டதில் தவறே இல்லை.

விஷயத்துக்கு வருவோம். பாண்டிராஜ் தயாரிப்பில் ‘மெரீனா புரட்சி’ என்ற படம் தயாராகி ரிலீசுக்கு ரெடியாகி நிற்கிறது. ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தில் ஒரு ரேக்ளா ரேஸ் வைத்திருந்த பாண்டிராஜ், இந்தப்படத்தின் ரிலீசுக்கு முன் ‘மெரீனா புரட்சி’ வந்தால் பீட்டா அமைப்பு டென்ஷன் ஆகும் என்று அப்படத்தை தள்ளிப் போட்டிருந்தார். ஏன்? அதில் வரும் கன்டென்ட் அப்படியாம். பீட்டா அமைப்பை போட்டு தாக்கு தாக்கென தாக்கியிருக்கிறாராம் படத்தின் இயக்குநர் எம்.எஸ்.ராஜ். பாண்டிராஜும் இவரும் சேரன் படங்களில் ஒன்றாக பணியாற்றியிருக்கிறார்கள்.

‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தில் வரும் அந்த ரேக்ளா ரேஸ் வரவே கூடாது என்று டார்ச்சர் செய்த பீட்டா, எப்படியோ ஐந்து நிமிஷ காட்சியை நீக்கிவிட்டுதான் ஓய்ந்தது. இப்படியிருக்க… படத்தின் காதல் காட்சிகளிலேயே காய்ச்சி எடுக்கிற பாண்டிராஜ் விடுவாரா?

‘மெரீனா புரட்சி’யை அவுத்து விடுங்கடா என்று ஆர்டர் போட்டிருக்கிறாராம். படம் சென்சாருக்குப் போகும்போதே சலசலப்பை ஏற்படுத்தும் என்கிறார்கள். ஜல்லிக்கட்டுக்காக 
மெரீனாவில் கூடிய இளைஞர் கூட்டத்தையும், அதன் பின்னணியையும் அலசுகிற படம்தான் இது என்கிறார்கள். இன்றளவும் கூட,  அந்த பெரிய கூட்டம் தானா சேர்ந்ததா?  அல்லது பின்னணியில் யாராவது பெரிய மனுஷர்களின் வேலை இருக்கிறதா? என்றெல்லாம் மண்டையை கசக்கிக் கொண்டிருக்கிறது ஊர். எது எப்படியோ... ‘மெரீனா புரட்சி’ மீண்டும் ஒரு புரட்சியை விதைக்கத் வேகமாகத் தயாராகிவருகிறது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close