மீண்டும் இணையும் இயக்குனர் சுசீந்திரன் , யுவன் வெற்றிக்கூட்டணி!

  Newstm Desk   | Last Modified : 02 Aug, 2018 11:51 am
suseendran-yuvanshankar-raja-pairs-again-for-jenius

இயக்குனர் சுசீந்திரன் மற்றும்  இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா கூட்டணி ‘நான் மகான் அல்ல’ , ‘ஆதலால் காதல் செய்வீர்’ ஆகிய படங்களின் மூலமாக ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளனர். இந்த படங்களுக்கு பிறகு  இயக்குனர் சுசீந்திரன் மற்றும் யுவன் ஷங்கர் ராஜா ‘ஜீனியஸ்’ என்ற திரைப்படத்துக்காக மீண்டும் இணைந்துள்ளனர். 

எப்போதுமே ஒரு படம் முடியும் தருவாயில் இருக்கும் போதே அடுத்த படத்திற்கான வேலைகளை ஆரம்பித்து விடுவது இயக்குநர் சுசீந்திரனின் வழக்கம்.

தற்போது “ஏஞ்சலினா” படத்தினுடைய வேலைகள் முடிந்திருக்கும் நிலையில், “ஜீனியஸ்” என்று அடுத்த படத்தையும் ஆரம்பித்திருக்கிறார்.

இன்றைய சமூக சூழ்நிலையில் குழந்தைகள் மீது கல்வி திணிக்கப்படுவதால், அவர்களுக்கு உண்டாகும் மன அழுத்ததைப் பற்றி பேசும்படியாக கதை அமைத்திருக்கிறாராம் சுசீந்திரன்.

இந்தப் படம் நிச்சயமாக தமிழ் சினிமா வரலாற்றில் முக்கியமான இடம் பிடிக்கும் என நம்பிக்கையும் தெரிவித்துள்ளார்.
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close