‘கோலமாவு கோகிலா’ அட்டர் ப்ளாப் படமா?

  Newstm News Desk   | Last Modified : 17 Aug, 2018 10:46 am

is-kolamavu-kokila-a-flop-movie

ஒரு படத்தை ஓட வைப்பதற்கு தயாரிப்பாளர்களும், நடிகர்களும் படுகிற பிரயத்தனம் சொல்லி மாளாது. கதையை நம்பாமல், வெறும் பப்ளிசிட்டியை நம்புகிற வரைக்கும் தமிழ் சினிமாவில் இந்த நிலை நீடிக்கும் தான் போல. பலமான கதையை நம்புகிற காலம் எல்லாம் மலையேறி போய், பலான டைட்டில் வைத்தால் கல்லா கட்டலாம் என நடிகர் சிவகுமார்,  சூர்யா வீட்டிலிருந்தே தயாரிப்பாளர் வருகிற காலக் கொடுமையை எல்லாம் என்ன சொல்வது?

கதை மட்டுமல்ல, தன்னுடைய கதாபாத்திரமும் முக்கியம் என்று நினைக்கிற நயன்தாரா படத்திற்கும் இந்த நிலைமை வந்தது தான் அதிர்ச்சி. 

‘நயன்தாரா நடிக்கும்’ என்று டைட்டிலில் பெயர் போட்டு படமெடுக்கிற லெவலுக்கு நயன்தாரா வந்து எத்தனையோ வருஷங்கள் ஆகிறது. தனி நாயகியாக அவர் நடிப்பில் வெளிவந்த ‘டோரா’, ‘அறம்’ எல்லாமே வேற லெவல் ஹிட். ஆனால் நாளைக்கு ரிலீஸாகிற, லைக்கா தயாரிக்கிற ‘கோலமாவு கோகிலா’ பட பிரமோஷன் படு கேவலம். 

‘யோகிபாபுவின் காதலை நயன்தாரா ஏற்றுக் கொண்டாரா?’ என்கிற தலைப்பில், ‘கோலமாவு கோகிலா’ படத்திற்கான பத்திரிகை செய்தியை அனுப்பியிருக்கிறார்கள். படத்தோடு சேர்த்து, நயன்தாராவின் பெயரையும் கெடுத்திருந்தார்கள் தயாரிப்பாளர்கள். 

நயன்தாரா பட பப்ளிசிட்டிக்கு வரமறுக்கிறார் என்பதற்காக இப்படியெல்லாம் செய்தி கிளப்பி, இன்னும் ரசிகர்களை ஏமாற்றுகிற காலத்திலா இருக்கிறீர்கள். இதையெல்லாம் நம்புகிற நிலையிலா ரசிகர்கள் இருக்கிறார்கள். மூன்று கோடிகளுக்கும் மேல் சம்பளம் வாங்கிய நயன்தாராவை நம்பாமல், யோகிபாபுவை நம்பியிருக்கும் படத் தயாரிப்பாளர்களை எந்த லிஸ்டில் சேர்ப்பது?

ப்ளாப் ஆகும் என்று ஏற்கெனவே தெரிந்த படங்களுக்குத் தான் எக்குதப்பாக பப்ளிசிட்டி செய்வார்கள் என்கிற முன்னுதாரணத்துடன், ‘இப்படியெல்லாம் பப்ளிசிட்டி பண்ணலைன்னா ‘கோலமாவு கோகிலா’ படம் ப்ளாப் என்கிற பயம் காரணமா?’ என்று புருவம் உயர்த்துகிறார்கள் சினிமா நிருபர்கள். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close