‘பிங்க்’ ரீமேக்கில் அஜீத்

  Newstm Desk   | Last Modified : 18 Aug, 2018 12:14 pm
actor-ajith-in-pink-remake-film

அஜித் தற்போது சிவா இயக்கத்தில் ‘விசுவாசம்’ படத்தில் நடித்து வருகின்றார். இந்தப் படம் முடிந்து அடுத்து அஜித் யாருடன் கூட்டணி அமைக்கப்போகின்றார் என்ற எதிர்ப்பார்ப்பு நிலவி வர, அஜித் அடுத்து போனிகபூர் தயாரிப்பில் நடிக்கப்போகின்றாராம், இது ஸ்ரீதேவி உயிரோடு இருந்த போது அஜீத் கொடுத்த வாக்குறுதியாம்.

மேலும், இப்படத்தை தீரன் வினோத் இயக்கவுள்ளதாகவும், இதற்காக அஜித் இரண்டு முறை வினோத்துடன் பேச்சு வார்த்தைகள் நடத்தியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

அடுத்த வருடம் ஜனவரி மாதம் தொடங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் ரசிகர்களுக்கு செம்ம உற்சாகத்தை கொடுத்துள்ளது.

அமிதாப் என்றால் அஜீத்திற்கு ஆல்டைம் பேவரைட். தன் வயதிற்கான வேடங்களைத் தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்ததும் அந்த வகையில் தான். அமிதாப் நடித்து, பெரிய ஹிட்டடித்த ‘பிங்க்’ படத்தின் தமிழ் ரீமேக்கில் அஜீத் நடிக்க முடிவு செய்திருப்பதாக செய்திகள் கசிகின்றன. 

அப்படி இந்த படம் கமிட் ஆனால், மாஸ் இல்லாத முழுக்க முழுக்க கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு படமாக இது அஜித்திற்கு அமையும்.
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close