நெகிழ வைத்த இளையராஜா...

  Newstm Desk   | Last Modified : 21 Aug, 2018 11:27 am
prakashraj-emotional-speech-about-illayaraja

மொபைல் போன் வைத்திருப்பவர்கள் எல்லோருமே புகைப்படக்காரர்களாக செல்பி எடுத்துக் கொள்வது மாதிரி, கம்ப்யூட்டருக்குள் இசை வந்தபின்னர், எல்லாருமே இசையமைப்பாளர்களாகவும், பாடலாசிரியர்களாகவும் அவதாரமெடுக்கிறார்கள். ஆனாலும், நெகிழ்ச்சியான படங்களுக்கு இளையராஜாவை விட்டால் வேறு யார்? என்ற நிலை தான் இன்னமும்.

‘வயது அறுபது மாநிறம்’ என்றொரு படம். ஞாபக மறதி நோயால் பாதிக்கப்பட்டவராக பிரகாஷ்ராஜும், அவரது மகனாக விக்ரம் பிரபுவும் நடித்திருக்கிறார்கள். முழுக்க முழுக்க பிரகாஷ்ராஜ் நடிப்புக்கான படம் என்றாலும், இசையில் இளையராஜா வழக்கம் போல படம் முழுக்கவே அசத்தியிருக்கிறாராம். அது நிஜம் என்பது போல இருந்தது ட்ரைலர்.

இப்படத்தின் பிரஸ்மீட்டில் பேசிய பிரகாஷ்ராஜ், வார்த்தைக்கு வார்த்தை இளையராஜாவின் புகழைச் சொல்லி சொல்லி மாய்ந்து போனார். 

‘இந்தக் கதையை கன்னடத்தில் கேட்டவுடனேயே அதன் தமிழ் ரைட்ஸ்சை வாங்கிவிட்டேன். பொருத்தமான இயக்குனர் ராதாமோகன்தான். நான் அவரிடம் சொன்ன பின் இந்த கதைக்காக அவர் அலைந்து திரிய ஆரம்பித்துவிட்டார் என்றார் பிரகாஷ்ராஜ்.

மனசை பாதிக்கிற கதைகளுக்கு எப்பவுமே ராஜா சார் தானே? உடனே அவரைத் தேடிப் போனேன். படத்தை பார்த்த ராஜா சார், “எப்பய்யா படத்தை கொண்டு வந்து தரப்போறீங்க? நான் பேக்ரவுண்ட் இசைக்க தயாராகிட்டேன்” என்று கேட்டுக் கொண்டே இருந்தார்’ என்றார்.

எந்தளவுக்கு இந்த படத்தோடு இளையராஜா ஒன்றிப்போனார் தெரியுமா? திருவண்ணாமலைக்கு சாமி கும்பிடப் போனவர், திடீரென பிரகாஷ்ராஜுக்கு போன் அடித்து, “அந்த ஆறாவது ரீல்ல நீ பேசுற வசனத்தை இன்னும் கொஞ்சம் ஹஸ்கி வாய்ஸ்ல பேசுனா நல்லாயிருக்கும்” என்று சொல்கிற அளவுக்கு!

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close