‘செருப்பால அடிச்ச மாதிரி இருந்துச்சு’ | விஜய்சேதுபதி ஓபன் டாக்

  Newstm Desk   | Last Modified : 27 Aug, 2018 02:12 pm
vijay-sethupathi-open-talk-merkku-thodarchi-malai-film-sucess

அண்மையில் வெளிவந்த ‘மேற்கு தொடர்ச்சி மலை’ படத்தின் தயாரிப்பாளர் நடிகர் விஜய் சேதுபதிதான். படம் வெளியான சில மணி நேரத்தில் அப்படம் குறித்த கருத்துகளை தத்தமது வலை தளங்களிலும், சமூக ஊடகங்களிலும் பரிமாறிக் கொண்டார்கள் நிருபர்கள். ஆரம்பத்தில் இப்படத்திற்கு பெரிதாக தியேட்டர் ஒதுக்காத வியாபாரிகள், இந்த வாரத்திலிருந்து அதிக தியேட்டர்களை ஒதுக்கி பரிகாரம் செய்து கொண்டார்கள். இதையடுத்து தங்கள் நன்றியை தெரிவிக்க மீடியாவை கூட்டியது. அங்குதான் இப்படி பரவசமானார் விஜய் சேதுபதி.

“இப்படத்தின் இயக்குனர் லெனின் பாரதி என்னோட நண்பர். நான் நடிக்க வந்த புதிதில் அவர்தான் அசோசியேட் இயக்குனர். என்னை மனுஷனா மதிச்சி நடத்தியவர். அவர் யாரையும் குறை சொல்லி பேசி நான் கேட்டதேயில்ல. அப்படியொரு நல்ல மனுஷன். அந்த நன்றிக்கடனுக்காகதான் இந்தப்படம் தயாரிச்சேன். படத்தை அவர் எனக்கு காண்பிச்ச போது, எனக்கு புடிக்கல. படத்தின் மீது நம்பிக்கையும் இல்ல. ரிலீஸ் செய்ய முயற்சி செஞ்சோம். ஒருவரும் வாங்கவும் முன் வரல. பிறகு தாய் சரவணன் மூலமா படத்தை வெளியிட்டோம்.”

“அதற்கப்புறம் நீங்கள்லாம் எழுதிய விமர்சனங்களும், இந்த படத்தை நீங்கள்லாம் கொண்டாடியதையும் கேட்ட பிறகுதான் எனக்குன்னு ஒரு விமர்சன பார்வை வந்திச்சு. நாமதான் தப்பா முடிவு பண்ணிட்டோமான்னு நினைச்சேன். செருப்பால் அடிச்ச மாதிரி இருந்திச்சு. இந்தப்படத்தை பற்றிய எல்லா பெருமைகளும் லெனின் பாரதிக்கு மட்டும்தான். அதில் நான் பங்கு போட்டுக்க விரும்பல. அது சரியும் இல்ல” என்றார் வெளிப்படையாக!

விஜய் சேதுபதியின் இந்த வெளிப்படையான பேச்சு, அவர் மீதிருக்கும் மரியாதையை மேலும் உயர்த்துவதாக இருந்தது
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close