விஜய் தேவரகொண்டாவின் நோட்டா ட்ரெய்லர் வெளியானது

  கனிமொழி   | Last Modified : 06 Sep, 2018 04:39 pm

vijay-devarkonda-s-nota-trailer-released

ஆனந்த ஷங்கர் இயக்கத்தில் விஜய் தேவர்கொண்டா நடிக்கும் நோட்டா படத்தின் ட்ரெய்லர் வெளியானது. ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்தப் படத்திற்க்கு சாம் சி.எஸ் இசை அமைத்துள்ளார்.

மேலும் சத்யராஜ் மற்றும் நாசர் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மெஹ்ரீன் பிர்சாடா கதாநாயகியாக இப்படத்தில்  நடித்துள்ளார். இந்த படத்தின் இயக்குனர் இதற்க்கு முன்னதாக இருமுகன் படத்தை இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுவரை காதல் படங்களில் நடித்த இவர் தற்போது  அரசியல் படமான நோட்டாவில் நடித்துள்ளார். இந்த படத்தின் மூலம் தமிழில் முதன்முறையாக அறிமுகமாகிறார் விஜய் தேவரகொண்டா. அர்ஜுன் ரெட்டி படத்திற்குப் பிறகு இவருக்கு இருந்த ரசிகர்கள் எண்ணிக்கை கீதா கோவிந்தம் படத்தின் மூலம் இருமடங்கானது. குறிப்பாக இளம் பெண்கள் பெரும்பாலானோரை இவர் ஈர்த்துள்ளார்.

newstm.in


 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close