சர்கார் படத்தின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் நான் தான்: ஏ.ஆர்.முருகதாஸ்

  Newstm Desk   | Last Modified : 30 Oct, 2018 03:42 pm
ar-murugadoss-tweet-over-sarkar-issue

சர்கார் கதைக்கும், செங்கோல் கதைக்கும் எந்த சம்மந்தமும் இல்லை, கதையின் கரு ஒத்து போனதே தவிர மற்றபடி, சர்கார் படத்தின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் என அனைத்தும் நான் தான் என ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்துள்ளார். 

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் 'சர்கார்'. இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் வருகிற நவம்பர் 6ம் தேதி ரீலீஸாகும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

இந்த சூழ்நிலையில், தன்னுடைய கதை திருடி ஏ.ஆர்.முருகதாஸ் 'சர்கார்' என்ற படத்தை எடுத்துள்ளதாக  வருண் ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் பல்வேறு கட்ட விசாரணைக்கு பிறகு இரு தரப்பினரும் சமரச பேச்சுவார்த்தைக்கு வந்துள்ளனர். 

'சர்கார்' படத்தில் வருண் ராஜேந்திரனின் பெயர் போட்டு நன்றி தெரிவிக்கப்படும் என ஏ.ஆர்.முருகதாஸ் நீதிமன்றத்தில் கூறியதையடுத்து இந்த விவகாரம் முடிவுக்கு வந்துள்ளது.

இதுகுறித்து இயக்குநர் பாக்யராஜ் விளக்கமளித்துள்ள நிலையில், ஏ.ஆர்.முருகதாஸும் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், "ஒருவரின் ஓட்டை ம் கள்ள ஓட்டு போடுவது என்ற கதையின் கரு. என்னைப்போல் ஒரு இணை இயக்குநரும் இந்த கதையை யோசித்துள்ளார். அவரை ஊக்குவிக்கும் பொருட்டு அவரது பெயரை டைட்டிலில் போட நான் ஒப்புக்கொண்டேன். மத்தபடி, எனது கதைக்கும், செங்கோல் கதைக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. ர்கார் படத்தின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் என அனைத்தும் ஏ.ஆர்.முருகதாஸ் தான்" என தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்டுள்ள கடிதம்:

 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close