ரசிகர்களை தெறிக்கவிடும் 2.0 ட்ரைலர் இதோ...

  திஷா   | Last Modified : 03 Nov, 2018 01:02 pm
shankar-rajinikanth-s-2-0-trailer

நடிகர் ரஜினிகாந்த் இயக்குநர் ஷங்கர் கூட்டணியில் உருவாகியிருக்கும் இரண்டாவது திரைப்படம் ‘2.0’. இரண்டாண்டுகளுக்கு மேல் இந்தப் படம் தயாரிப்பில் உள்ளது. இதனை ‘லைகா புரொடக்‌ஷன்’ நிறுவனம் சார்பில் சுபாஷ்கரன் தயாரித்து வருகிறார். 

3D தொழில்நுட்பத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில் ஏமி ஜாக்ஸன் ஹீரோயினாக நடிக்க, பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் வில்லன் வேடத்தில் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்திற்கு,   நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். 

படத்தின் போஸ்டர்கள், டீசர், 2 பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில், தற்போது இதன் ட்ரைலர் வெளியாகியுள்ளது. 

— Lyca Productions (@LycaProductions) November 3, 2018

ட்ரைலர் வெளியீட்டு விழா நடைபெற்ற சத்யம் திரையரங்கு இதற்காக காலை முதலே விழாக்கோலம் பூண்டிருந்தது. இந்த விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார், இயக்குநர் ஷங்கர் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டனர். 

தொடர்ந்து இணையத்தில் வெளியிடப்பட்ட இந்த ட்ரைலர் ரசிகர்களிடம் கூடை கூடையாய் லைக்ஸை குவித்து வருகிறது. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close